Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. தந்தை இறந்த சோகத்தின் நடுவே அரை சதம் விளாசிய ரிஷப் பந்த்!

பெங்களூர்: டெல்லி டேர்டெவில்ஸ் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தந்தை இறந்த போதிலும் சோகத்தை மறைத்து மிகவும் அற்புதமாக விளையாடி 50 ரன்களை குவித்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும், பெங்களூர் அணிக்கும் சனிக்கிழமை இரவு பெங்களூரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வென்றது.

Rishabh pant played after his father died

இதில் கேதர் ஜாதவின் அரை சதத்தின் உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்களே எடுக்க முடிந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடைசி வரை போராடியும் பலன் இல்லை. ஒட்டுமொத்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியின் 76-வது தோல்வி இதுவாகும்.

இந்நிலையில் ரிஷாப் பந்த்தின் தந்தை ராஜேந்திர பந்த் (53) கடந்த புதன்கிழமை இரவு மரணம் அடைந்தார். இதையடுத்து ஹரித்வார் சென்ற ரிஷப், தந்தைக்கு இறுதிசடங்குகளை செய்து விட்டு, வெள்ளிக்கிழமை இரவு அணியுடன் இணைந்தார். பின்னர் சனிக்கிழமையே டெல்லியின் முதல் ஆட்டம் என்பதால் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியது. எனினும் அவர் அந்த விளையாட்டில் கலந்து கொண்டார்.

தனது தந்தையின் இறப்பை மறந்து 57 ரன்களை குவித்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், யுவராஜ்சிங் உள்ளிட்டோரின் பாராட்டுகளை அவர் பெற்றார்.

Story first published: Monday, April 10, 2017, 17:35 [IST]
Other articles published on Apr 10, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+