Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் கோலியின் "நம்பர்.1 தலைவலி" ரிஷப் பண்ட் - 4வது டெஸ்ட்டில் காத்திருக்கும் "அக்னிப்பரிட்சை"

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், சைலன்ட் கில்லராக சொதப்பி வந்த ரிஷப் பண்ட், இப்போது பெரும் சிக்கலில் இருக்கிறார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்று சமமாகியுள்ளது.

இந்த சூழலில், வரும் செப்.2ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்கான அணித் தேர்வில் ஏக குழப்பங்களும் நிலவுகிறது.

X-Factor ரிஷப் பண்ட்

X-Factor ரிஷப் பண்ட்

இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், அனைவரது பார்வையும் மிடில் ஆர்டர் சொதப்பல்ஸ் மீது தான் இருந்தது. ஆனால், சப்தம் போடாமல் இப்போது ஏகத்துக்கும் சொதப்பி இருப்பவர் ரிஷப் பண்ட் மட்டுமே. இந்திய அணியின் "X-Factor" என்று கிரிக்கெட் பண்டிதர்களால் வர்ணிக்கப்பட்டவர். ஆனால், இந்த தொடரில் இதுவரை எந்த தாக்கமும் ஏற்படுத்தாத ஒரே வீரர் என்றால் அது ரிஷப் பண்ட் மட்டுமே. ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட புஜாரா கூட, கடந்த டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்துவிட்டார். அதேபோல், ரஹானே 2வது டெஸ்ட்டில் அரைசதம் அடித்துவிட்டார். நம்ம கேப்டன் விராட் கோலி கூட, ஹெட்டிங்லேவின் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். ஆனால், ரிஷப் மட்டுமே, அணிக்கு என்ன தேவையோ இதுவரை அதை கொடுக்கவில்லை.

எக்ஸ்-இந்திய வீரர்

எக்ஸ்-இந்திய வீரர்

25, 37, 22, 2, 1. இது தான் இத்தொடரில் ரிஷப் பண்ட் அடித்திருக்கும் ரன்கள். மொத்தமாக 87 ரன்கள். அதிகபட்சம் 37. ரிஷப் பண்ட் அரைசதம் அடிக்க வேண்டுமென்றோ, சதம் அடிக்கவேண்டும் என்றோ நாம் சொல்லவில்லை. அவரிடம் அணி என்ன எதிர்பார்க்கிறதோ, எதிர்பார்த்ததோ.. அதனை அவரால் செய்ய முடியவில்லை என்பதே இங்கு பிரச்சனை. அவரிடம் அணி எதிர்பார்ப்பது என்ன? ஒரு அட்டாக்கிங் ஆட்டம். லோ ஆர்டரில் களமிறங்கி, இங்கிலாந்து பவுலர்களை திணற வைக்கும் இன்னிங்ஸ். அவர் எவ்வளவு ரன்கள் அடிக்கிறார் என்பது முக்கியமல்ல. தனது பேட்டிங்கில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதே இந்திய அணி அவரிடம் ஏதிர்பார்ப்பது. அதனால் தான் அவர் X-Factor வீரர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால், இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், X-Factor வீரர் ரிஷப் பண்ட், எக்ஸ்-லவ்வர், எக்ஸ்- ஹஸ்பண்ட் மாதிரி, எக்ஸ்-இந்திய வீரர் ஆகிவிடுவாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

பெரிய தலைவலி

பெரிய தலைவலி

குறிப்பாக, ஓலே ராபின்சன் கண்டாலே பண்ட் ஓப்பனாக பயப்படுகிறார். வடிவேல் சொல்வது போல, கண்ணுல மரணபயம் கண்ணாடி மாதிரி அப்படியே தெரிகிறது. ஆகாஷ் சோப்ரா சொல்வது போல், ரிஷப் பண்ட் எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை ஓலே ராபின்சன் தான் முடிவு செய்கிறார். உண்மையை சொல்லப் போனால், கேப்டன் விராட் கோலியின் மிக முக்கிய தலைவலியாக இருப்பது ரிஷப் பண்ட் தான். (கேப்டனே இப்போ தலைவலி தான்.. போவியா அங்குட்டு!). லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு, ரிதிமான் சாஹாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் பறிபோகுமா?

இங்கிலாந்தில் பறிபோகுமா?

ஆனால், இங்கு வேடிக்கை என்னவெனில், இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், விக்கெட் கீப்பராக களமிறங்கிய சாஹா மோசமாக சொதப்ப, ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட பண்ட், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இரண்டாவது முறை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். மேட்ச் வின்னராக ஜொலித்தார். இப்போது, அதே ரிஷப் பண்ட், இங்கிலாந்தில் ரன்களை தேடிக் கொண்டிருக்க, சாஹாவுக்கு ஆதரவு குரல்கள் எழுகின்றன. ஆனால், நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், ரிஷப் பண்ட் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே தெரிகிறது. பண்ட் மீது இந்திய அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. எல்லாற்றுக்கும் மேல், கேப்டன் கோலி அவரை அதிகம் நம்புகிறார். பண்ட் மேட்சையே மாற்றும் திறன் கொண்டவர் என்று நம்புகிறார்.

ஏனோதானோ ஆட்டம்

ஏனோதானோ ஆட்டம்

தவிர சீனியர் வீரர் ரோஹித் ஷர்மாவின் ஆதரவும் ரிஷப் பண்ட்டுக்கு இருக்கிறது. ஸோ, கடைசி மேட்சை விடுங்க.. வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் நிச்சயம் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கலாம். அவரது ப்ளஸ் பாயிண்ட் அட்டாக்கிங். அது ஆஸ்திரேலியாவில் பலித்தது. இங்கிலாந்தில் இதுவரை எடுபடவில்லை. காரணம், அவரது மூவ்மென்ட்ஸ் தான். பந்துகளை இறங்கி வந்து அடிக்க நினைக்கிறார். ஆசைப்படுகிறார். மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வந்தாலும், பந்தை டவுன் டூ தி டிராக் இறங்கி வந்து அடிக்க நினைக்கிறார். ஆனால், அதற்கு அவர் சரியான பந்துகளை தேர்வு செய்வதில் கோட்டைவிடுகிறார். சறுக்குகிறார். இறங்கி அடிக்க வேண்டும் என்ற சிந்தனை அவரது மூளையை குடைந்து கொண்டிருக்க, லைன் அண்ட் லெந்த் பந்துகளில் அதிக கவனம் செலுத்தாமல் ஏனோதானோவென்று அதனை டீல் செய்கிறார். அந்த அலட்சியில் மோடில் தான் அவர் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து விடுகிறார். கால்களை அதிகம் நகர்த்துகிறார். ஆனால், எப்போது அது தேவையோ, அப்போது அதை செய்ய மறந்துவிடுகிறார். ஸோ, இந்த நான்காவது டெஸ்ட் போட்டி அவருக்கு ஒரு அக்னிப்பரிட்சை எனலாம். அணியில் நிலைத்திருக்க வேண்டுமெனில், இதில் அவர் தேறியே ஆக வேண்டும். ஏனெனில், ரிஷப் பண்ட் வகையறா அட்டாக்கிங் வீரர்கள் நமக்கு அதிகம் கிடைக்கமாட்டார்கள். ஸோ, எதிர்காலத்தில் அவரை தவற விட்டால் அது இந்திய அணிக்கும் நஷ்டம், அவருக்கும் நஷ்டம்.

Story first published: Monday, August 30, 2021, 18:14 [IST]
Other articles published on Aug 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+