Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: ஓட்டல் வராண்டாவில் பிராக்டிஸ்... தம்பி..! உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...?

போர்ட் ஆப் ஸ்பெயின்: ஓட்டல் அறையின் வெளியில் இளம் வீரர் பன்ட் எடுக்கும் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுக்கும் வீடியோ தாறுமாறாக வைரல் ஆகியிருக்கிறது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக தடைபட்டது. 2வது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Rishabh pant practices inside the hotel corridor with kuldeep yadav

இந்நிலையில் தற்போது இளம் வீரர் ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற பயிற்சிக்கும் இவரின் பயிற்சிக்கும் ஒரு வித்தியாசத்தை அந்த வீடியோவில் பார்க்கலாம்.

அந்த வீடியோவை ரிஷப் பன்ட் தான் பதிவிட்டுள்ளார். அதில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் பன்ட் ஆகியோர் ஓட்டல் அறையின் முன்பு பயிற்சி எடுக்கின்றனர்.

அதாவது ஓட்டல் வராண்டாவில் இருவரும் பிராக்டிஸ் செய்கின்றனர். கொஞ்சம் நீளமான வராண்டா என்ற சொல்லலாம். ஒரு முனையில் குல்தீப் யாதவ் நின்று கொண்டு முதலில் பேசுகிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது தெளிவாக கேட்க வில்லை.

ஓட்டல் அறையில் வெளியில் இருக்கும் சிறிய தாழ்வாரத்தில் குல்தீப் யாதவ் பந்துவீசுகிறார். அதனை ரிஷப் பன்ட் பிடித்து கீப்பிங் பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அணியில் பலரும் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.

Story first published: Tuesday, August 13, 2019, 13:09 [IST]
Other articles published on Aug 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+