Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதே மாதிரி ஷாட்.. தோனி மாதிரியே ஆகணும்.. வெறித்தனமாக பயிற்சி செய்யும் இளம் வீரர்!

டெல்லி : இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் இன்னும் அணியில் தன் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளவில்லை.

Recommended Video

Dhoni போல Helicopter shot அடிக்கும் Rishabh pant

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் பயிற்சி செய்து வருகிறார் ரிஷப் பண்ட்.

அவர் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.

தோனிக்கு அடுத்து..

தோனிக்கு அடுத்து..

இந்திய அணியில் தோனி இடம் பெற்று ஓராண்டு ஆகிறது. கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் தான் தோனி ஆடி இருந்தார். அவருக்கு பின் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஆடி வந்தார் ரிஷப் பண்ட்.

சுமார் ஆட்டம்

சுமார் ஆட்டம்

இளம் வீரரான அவர் அடுத்த தோனி என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டது. எனினும், ரிஷப் பண்ட் களத்தில் பெரிதாக சாதிக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் அடித்துள்ள அவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுமாராகவே ஆடி வந்தார்.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

இடையே அவருக்கு பதிலாக ஒரு போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் கேஎல் ராகுல். அவரது செயல்பாடுகள் ஈர்க்கவும் கேப்டன் விராட் கோலி அவரை நிரந்தர விக்கெட் கீப்பராக பயன்படுத்த திட்டமிட்டார். அடுத்த தொடர்களிலும் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் ராகுல்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்திய வீரர்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். மீண்டும் ஐபிஎல் தொடர் மூலம் அவர்கள் களத்துக்கு திரும்ப உள்ள நிலையில், பல வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி

கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி

ரிஷப் பண்ட் டெல்லியில் ஒரு கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி செய்து வருகிறார். சமீபத்தில் அவர் பயிற்சி செய்த வீடியோ ஒன்றை அந்த கிளப் பகிர்ந்து இருந்தது. அதில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் காட்சி இடம் பெற்று இருந்தது.

ஹெலிகாப்டர் ஷாட்

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து இருந்தார் ரிஷப் பண்ட். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஐபிஎல் தொடருக்கு பயிற்சி செய்து வரும் நிலையில் அதிரடி ஆட்டம் ஆட பண்ட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

தோனி 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால் அணியில் இடம் பெற முடியும் என கூறப்படும் நிலையில், ரிஷப் பண்ட்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி அணியில் தன் இடத்தை ஓரளவு நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

Story first published: Thursday, July 30, 2020, 14:35 [IST]
Other articles published on Jul 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+