For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் SPECIAL..!! தென்னாப்பிரிக்காவுக்கு பயம் காட்டிய ரிஷப்..!! சதத்தை தவறவிட்ட பண்ட்..!!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர் உயிரோட்டமாக இருக்க, இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டும்.

இந்த நிலையில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவான், விராட் கோலி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியாவுக்கு நெருக்கடி

இந்தியாவுக்கு நெருக்கடி

இதனையடுத்து, அணியை மீட்கும் முயற்சியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் ஈடுபட்டனர். தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்டம்புகளை குறிவைத்து வீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர். இந்த நிலையில், டெஸ்டில் தனது இடத்தை நிரூபித்த ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டியில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ODI தடுமாற்றம்

ODI தடுமாற்றம்

இந்தப் போட்டிக்கு முன்னர் வரை ரிஷப் பண்ட் 19 போட்டிகளில் மட்டும் விளையாடி 545 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.வெறும் 3 அரைசதம் தான் அடித்திருந்தார். டெஸ்டில் 4 சதம் விளாசிய ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடித்தது இல்லை. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்தில் விளையாடினார்

சிக்சர்

சிக்சர்

தென்னாப்பிரிக்காவின் நெருக்கடியை உடைக்கும் விதமாக ரிஷப் பண்ட் பளார் என சிக்சர் அறைந்தார். இதன் பின்னரும் தென்னாப்பிரிக்கா தங்கள் மீது அழுத்தத்தை செலுத்த ரிஷப் பண்ட் அனுமதி அளிக்கவில்லை. சுழற்பந்துவீச்சாளர்களின் லைன்களை கெடுக்கும் விதமாக பவுண்டரிகளை விரட்டினார்

ரிஷப் பண்ட் 85

ரிஷப் பண்ட் 85

கே.எல்.ராகுலும் தன் பங்கிற்கு பவுண்டரிகள் விளாச, இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மீது சேர்த்தது. ரிஷப் பண்ட் 10 பவுண்டரிகள், 2சிக்சர்கள் விளாசினார். இதனார் ரிஷப் பண்ட் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் அடிச்ச அதிகபட்ச ஸ்கோராகும்.

Story first published: Friday, January 21, 2022, 17:42 [IST]
Other articles published on Jan 21, 2022
English summary
Rishabh Pant Punishes south Africa by scoring 85 runs in 2nd odi vs SA ரிஷப் பண்ட் SPECIAL..!! தென்னாப்பிரிக்காவுக்கு பயம் காட்டிய ரிஷப்..!! சதத்தை தவறவிட்ட பண்ட்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+