Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உடல் முழுவதும் ரத்தம்.. நிற்கக்கூட முடியாமல் தவித்த ரிஷப் பண்ட்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளும், பண்ட்-ன் காயங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை பதர வைத்துள்ளது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் நேற்று இரவு உத்தர்காண்ட்-ல் இருந்து சாலை வழியாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அதிகாலை ரூர்கி அருகே சென்ற போது அவரின் கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் மற்றும் ஊர் மக்கள் ரிஷப் பண்ட்-ஐ மீட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிசிடிவி பதிவுகள்

சிசிடிவி பதிவுகள்

இந்நிலையில் ரிஷப் பண்ட்-ன் கார் விபத்திற்கு உள்ளான காட்சிகள் சாலையின் அருகே இருந்த கடையின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் அதிகாலை 5.30 மணியளவில் வேகமாக வந்த கார் சாலையின் தடுப்பின் மீது மோதி சுழன்றுக்கொண்டே சென்றுள்ளது. மோதி வேகத்தில் கார் தீப்பிடித்த காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தீ பற்றிய காட்சிகள்

தீ பற்றிய காட்சிகள்

இதே போல விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒருவர் செல்போனில் எடுத்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார் ஒருபுறம் தீப்பற்றி எறிய, மறுபுறம் ரிஷப் பண்ட் தலை முதல் கால் வரை ரத்தம் சொட்ட சொட்ட விழுந்துக்கிடக்கிறார். அவரை அருகில் இருந்தவர்கள் உதவி செய்து தூக்கி நிறுத்திய காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது காண்போரை பதறவைக்கிறது.

முதற்கட்ட தகவல்

முதற்கட்ட தகவல்

இதுகுறித்து முதற்கட்ட தகவலை கொடுத்த போலீசார், ரிஷப் பண்ட் இரவு முழுவதும் உறக்கமின்றி தனியாளாக காரை ஓட்டி வந்துள்ளார். சாலையில் பணி மூட்டம் எதுவும் இல்லாததால், அவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார் எனக்கூறியுள்ளனர். மேலும் கார் தீப்பிடித்ததை அடுத்து அவர், கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவர்களின் ரிப்போர்ட்

மருத்துவர்களின் ரிப்போர்ட்

பண்ட்-ன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் பண்ட்-க்கு உயிருக்கு ஆபத்தாகும் வகையில் ஒன்றும் ஆகவில்லை எனக்கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு தலையிலும், கால் பகுதியிலும் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் முதுகுபகுதியிலும் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

எப்போது குணமடைவார்

ரிஷப் பண்ட் சமீபத்தில் நடந்த வங்கதேச தொடரில் விளையாடிவிட்டு தற்போது தான் இந்தியாவுக்கு வந்தார். இலங்கை தொடரில் வாய்ப்பு பெறாத அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணையவிருந்தார். ஆனால் அதற்குள் தான் விபத்து நடந்துள்ளது. பண்ட் முழுமையாக குணமடைய 6 மாதங்களுக்கும் மேல் ஆகும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Friday, December 30, 2022, 13:57 [IST]
Other articles published on Dec 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+