
அதிரடி பண்ட்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அதிரடி காட்டி வந்த ரிஷப் பண்ட் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஏனென்றால் அந்த டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றது பண்ட்-ன் அதிரடி முக்கிய காரணமாக அமைந்தார். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் இந்தாண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர் வழிநடத்தி புள்ளிப்பட்டியலில் டாப் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

விளையாட்டுத்தனம்
போட்டியின் மிகுந்த பொறுப்புடன் விளையாடும் ரிஷப் பண்ட், மிகவும் சுறுசுறுப்பாகவும், குசும்பு பிடித்தவரும் தான். அவரின் விளையாட்டுத்தனமான செயல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வபோது வைரலாகும். இந்நிலையில் மனதளவில் ரிஷப் பண்ட் எவ்வளவு பாசமானவர் என அவரின் சிறுவயது பயிற்சியாளர் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பண்ட்-ன் மறுபக்கம்
ரிஷப் பண்ட் டெல்லியில் உள்ள சன்னட் கிளப்பில் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அந்த கிளப்பின் தலைமை பயிற்சியாளராக சின்ஹா பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு நாள் ரிஷப் பண்ட்-ன் மீது சின்ஹாவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் பேசாமல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் வருத்தமடைந்த ரிஷப் பண்ட், இரவு 3.30 மணிக்கு சின்ஹாவின் வீட்டின் கதவை தட்டி மண்ணிப்பு கோரியுள்ளார். இதற்காக அவர் நடு இரவில் தனது வீட்டில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்து சின்ஹாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மனம் உருகிய பயிற்சியாளர்
இதுகுறித்து பேசிய சின்ஹா, நான் ரிஷப் பண்ட்-டிடம் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இந்த நேரத்தில் வந்திருக்கிறாய் என கேட்டேன். அதற்கு நீங்கள் இதுவரை கோபப்பட்டு நான் பார்த்ததில்லை, என்னை மன்னித்துவிடுங்கள் பண்ட் பதிலளித்தார். அது என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது குடும்பத்தினர் கூட என்னை ஏன் சிறுவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்கிறீர்கள் என கேட்டனர் என சின்ஹா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











