Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியையே தூக்கி சாப்பிட்ட ரிஷப் பண்ட்.. மின்னல் வேகத்தால் பதறிப்போன வங்கதேசம்..ரசிகர்கள் ஆச்சரியம்!

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த விஷயம் தோனியையே தூக்கி சாப்பிடும் வகையில் இருந்ததால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட போதும் வங்கதேசம் விடாமல் போராடி வருகிறது.

513 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனர்கள் அட்டகாசமான அடிதளத்தை அமைத்தனர். அதாவது முதல் விக்கெட்டிற்கே 124 ரன்களை குவித்துவிட்டனர்.

பண்ட்-ன் வேகம்

பண்ட்-ன் வேகம்

முதல் இன்னிங்ஸை போலவே சுலபமாக அடித்துவிடலாம் என்று பந்துவீசிய இந்திய அணிக்கு ஓப்பனிங் வீரர்கள் ஷாண்டோ மற்றும் சாகீர் ஹாசன் அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் நம்பிக்கையிழந்திருந்த இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது ரிஷப் பண்ட் தான். ஏனென்றால் அவரின் விக்கெட் கீப்பிங்கால் தான் ஆட்டத்தில் திருப்புமுணையே ஏற்பட்டது.

 முதல் ஆச்சரியம்

முதல் ஆச்சரியம்

இந்நிலையில் உமேஷ் யாதவ் வீசிய பந்தை ஷாண்டோ அடிக்க முயன்ற போது எட்ஜாகி விராட் கோலியிடம் சென்றது. ஆனால் கோலி அதனை தவறவிட, பந்து எகிறி கீழே விழச்சென்றது. அப்போது சாதூர்யமாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கீழே விழச்சென்ற பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்து திருப்புமுணையை ஏற்படுத்திக்கொடுத்தார்.

ஆச்சரிய சம்பவம்

ஆச்சரிய சம்பவம்

இது ஒருபுறம் இருக்க, தோனியின் செயலை செய்து மீண்டும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். அக்‌ஷர் பட்டேல் வீசிய பந்தை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நூருல் ஹாசன் ஆஃப் சைட் திசையில் அடிக்க முயன்றார். இறங்கி வரவில்லை என்றாலும் நின்ற இடத்திலேயே சிறிதாக காலை உயர்த்தினார். ஆனால் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட் கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

தோனி ஸ்டைல்

தோனி ஸ்டைல்

வழக்கமாக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஒரு பேட்ஸ்மேன் கிறிஸில் இருந்து காலை சற்று தூக்கினாலும் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்துவிடுவார். அதை அச்சு அசலாக உரித்து வைத்தது போன்று ரிஷப் பண்ட் இன்று செய்தார். இதனால் பண்ட்-ஐ இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Saturday, December 17, 2022, 19:16 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+