ரிஷப் பண்ட்க்கு இவ்ளோ குசும்பு ஆகாது.. வைரலாகும் வீடியோ
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உதிர்த்த கவிதை ஒன்று வைரலாகி வருகிறது.

சென்னையில் நேற்று தொடங்கிய இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது (இன்னைக்கும் மட்டும் என்ன வாழுதாம்). கேப்டன் ஜோ ரூட் சதம் அடிக்க, சிப்லே 87 ரன்களில் அவுட்டானார்.
இந்தியாவின் Pace மற்றும் ஸ்பின் அட்டாக் மூலம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினின் பந்துகள் கூட அவர் பேச்சை கேட்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் அனைத்து பவுலர்களும் சோர்வடைந்தனர்.
இந்த அயற்சியையும் தாண்டி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கலாய்ப்பு ஒன்று சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் 70வது ஓவரில், வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை, சிப்லே Defend செய்தார்.
இதையடுத்து சிப்லேவை கிண்டல் செய்யும் விதமாக, "Mera naam hai Washington, Mujhe jana hai DC" என்று முணுமுணுத்தார் ரிஷப் பண்ட். அதாவது, 'என் பேரு வாஷிங்டன். நான் போகும் ஊரு DC' என்று அதற்கு அர்த்தம். அமெரிக்காவின் முக்கிய நகரமான வாஷிங்டன், Washington, D.C. என்று அழைக்கப்படுவதுண்டு.
டெஸ்ட் தொடர்களில், ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் நின்று சேட்டை செய்யும் ரிஷப்பின் கலாய் சென்னையிலும் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications