Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்த்தோட விக்கெட் கீப்பிங் இன்னும் சிறப்பா இம்ப்ரூவ் ஆகும்.. ரஹானே நம்பிக்கை

சென்னை : கடந்த சில போட்டிகளில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்தின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் சிறப்பான வகையில் முன்னேற்றமடைந்துள்ளது.

இந்நிலையில் அதிகமான போட்டிகளில் விளையாடுவதன்மூலம் பந்த்தின் விக்கெட் கீப்பிங் மேலும் முன்னேறும் என்று டெஸ்ட் போட்டிகளின் துணை கேப்டன் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் பேட்டிங்கில் எவ்வாறு செயல்படுவார் என்பது குறித்து நமக்கெல்லாம் தெரியும் என்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டியது மட்டுமே நமது வேலை என்றும் அவர் கூறியுள்ளார்.

Rishabh Pants wicketkeeping will improve with more game time in India - Ajinkya Rahane

கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த். ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறார். சிறப்பான விக்கெட் கீப்பிங்கையும் வெளிப்படுத்தி வருகிறார். ஆயினும் விக்கெட் கீப்பிங்கில் அவர் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.

அடிக்கடி முக்கிய கேட்ச்களை தவறவிடும் நிகழ்வுகளும் காணப்படுகிறது. இந்நிலையில் அதிகமான போட்டிகளை விளையாடுவதன்மூலம் அவர் தனது விக்கெட் கீப்பிங்கை மேலும் முன்னேற்றிக் கொள்வார் என்று டெஸ்ட் போட்டிகளின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 12, 2021, 18:57 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+