Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Rishabh pant -மருத்துவரிடம் சவால் விட்டேன்..விபத்து வாழ்க்கையை புரட்டி போட்டது! ரிஷப் பண்ட் உருக்கம்

மும்பை : இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் தற்போது விபத்திலிருந்து மீண்டு, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார். தமக்கு விபத்து ஏற்பட்டது குறித்தும், அதிலிருடநதது மீண்டது குறித்தும் பண்ட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியை தற்போது காண்போம்.

நான் உயிரோடு இருந்ததே அதிர்ஷ்டமாக உணர்ந்தேன். என்னுடைய உடல் தகுதியை மீட்பதற்காக நான் உலகத்தில் இருந்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இதன் மூலம் நான் வேகமாக உடல் தகுதியை பெற்று உடல் தகுதியை பெறுவது என்பது மிகவும் போர் ஆன ஒரு விஷயம். அது நிச்சயம் கடுப்பை கொடுக்கும். ஏனென்றால் ஒரே விஷயத்தை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

Rishabh pant said he challenged doctors to recover much faster in rehab

நான் கிரிக்கெட் விளையாடிய போது கூட எது பற்றியும் எதிர்காலம் குறித்து நான் யோசிக்க மாட்டேன். நான் அடிபட்டு இருந்த போது மருத்துவரிடம் கேட்டேன். நான் எப்போதும் மீண்டும் குணம் அடைவேன். பலரும் பல விஷயமாக கூறுகிறார்களே? நீங்கள் எனக்கு சரியான ஒரு காலத்தை சொல்லுங்கள் என்றேன். அதற்கு மருத்துவர் நீங்கள் குணமடைய 16 முதல் 18 மாதம் ஆகும் என்று சொன்னார்.

உடனே நான் மருத்துவரிடம் நீங்கள் எந்த நேரம் சொல்கிறீர்களோ அதைவிட ஆறு மாதம் விரைவாக நான் குணமடைந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டேன். தற்போது என்னிடம் நீ பைக்கில் செல்லாதே என்று கூறினார்கள். அப்போது உங்கள் எல்லாரையும் விட அதிக பயமும் ஏமாற்றமும் இருக்கிறது என்று கூறினேன். ஏனென்றால் எனக்கு இப்போதும் டிரைவிங் செல்வது பிடிக்கும். இதில் ஒரு சரிவு ஏற்பட்டு இருப்பதால் நான் இனி மீண்டும் அதை செய்யவே கூடாது என்பது இல்லை.

இந்த விபத்து என் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றால் நம்பிக்கைதான் ஒரே வழி. உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக நீங்கள் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என் பற்களை துலக்குவது மூலம் சந்தோஷம் கிடைக்கும் என்பதை நான் முதன் முறையாக உணர்ந்தேன். விபத்துக்கு பிறகு முதல்முறையாக குளித்து வெளியே வரும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படி சின்ன சின்ன விஷயத்தை மீண்டும் செய்வதன் மூலம் என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கி பலரும் உயிர் பிழைப்பது கிடையாது. இவ்வளவு பெரிய விபத்திலும் பெரிய எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் நான் அணியை விட்டு வெளியே இருந்ததால் என்னால் பெரியதாக எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் இம்முறை நான் அணியில் இருக்கப் போகிறேன். இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறார்கள். நான் அப்படிதான் என்னுடைய கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன். ரோகித் சர்மா கூட என்னிடம் இங்கிலாந்து பேஸ் பால் விளையாடுவது போல் நாம் ஏன் ரிஸ் பால் என்று ஒன்றை விளையாட கூடாது என்று கூறுகின்றார். நீ விளையாடுவதை போல் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று ரோகித் சர்மா என்னிடம் கூறுவார் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 2, 2024, 7:00 [IST]
Other articles published on Feb 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+