Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொளுத்திப்போட்ட வசீம் ஜாஃபர்.. மோசமாக அடித்துக்கொள்ளும் பண்ட் - சஞ்சு ரசிகர்கள்.. அடப்பாவமே!

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான தொடர் குறித்து வசீம் ஜாஃபர் கூறிய கருத்து இணையத்தில் போரை உருவாக்கியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 1 - 0 எனக்கைப்பற்றி அபார வெற்றி கண்டது. இதனை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்கவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசீம் ஜாஃபர் கருத்து

வசீம் ஜாஃபர் கருத்து

ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த பேச்சு தான் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ப்ளேயிங் 11-ஐ கூறி வரும் சூழலில் வசீம் ஜாஃபர் கூறிய கணிப்பு தான் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது இவர் கூட சஞ்சு சாம்சனுக்கு தனது அணியில் வாய்ப்பு தரவில்லை.

 என்ன காரணம்

என்ன காரணம்

டி20 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் மிகவும் மோசமாக சொதப்பி வருகிறார். அவருக்கு மாற்றாக இந்த முறையாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நியூசிலாந்தை சமாளிக்க இடதுகை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்பதால் பண்ட் சேர்க்கப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

 ரசிகர்களின் சண்டை

ரசிகர்களின் சண்டை

ஒருபுறம் ரிஷப் பண்ட் பதற்றத்தில் அதிரடி காட்டி அவுட்டாகிவிடுகிறார். ஆனால் சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சீரான வேகத்தில் ரன்களை விளாசக்கூடியவர். வேண்டுமென்றே அவர் ஒதுக்கப்படுகிறார் என கூறி வருகின்றனர். மற்றொருபுறம் ரிஷப் பண்ட் எந்தவகையில் குறைந்துவிட்டார், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான வீரர் என அவரது ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இரு வீரர்களின் ரசிகர்களும் ஆதரவுக்கொடுத்து வந்த சூழலில், ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ட்விட்டரில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டுள்ளனர். இதனால் இந்திய கிரிரிக்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நாளை போட்டியின் போது தான் ப்ளேயிங் 11 எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியும்.

Story first published: Thursday, November 24, 2022, 20:07 [IST]
Other articles published on Nov 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+