டிப்ஸ் மட்டும்தான் தருவார்.. நல்லா தூண்டுவார்.. அவர்தாங்க தோனி.. சிலிர்க்கும் ரிஷப் பந்த்
லக்னோ: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இடத்தை நிரப்புவார்என பேசப்பட்ட ரிஷப் பந்த், இப்போது தோனியை புகழ்ந்து ஐஸ் வைத்துள்ளார்.அவர் தனக்கு குரு என்று பந்த் கூறியுள்ளார்.
Recommended Video
தோனி இடத்தை நிரப்பப் போவது யார் என்று ஒரு பெரும் போட்டியே நடந்துவருகிறது. தோனியின் விக்கெட் கீப்பிங் இடத்தை ரிஷப் பந்த் நிரப்புவார் எனமுன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் பேட்டிங்கில் பெரிய அளவில் சொதப்பியதால் அந்த வாய்ப்பு அவருக்கு பறி போனது.
அதேசமயம், கே.எல். ராகுல் அபாரமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையினால் பந்த் இடத்தை ஆட்டிப் படைத்து விட்டார். இதனால் ரிஷப் பந்த்துக்கு அணியில் நிலையான இடம் கிடைப்பது கேள்விக்குறியாகி விட்டது.

தோனிக்கு பந்த் புகழாரம்
இந்த நிலையில் தோனியைப் புகழ்ந்து பேசியுள்ளார் பந்த். டெல்லி ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியினருடன் அவர் கலந்து கொண்ட இன்ஸ்டாகிரம் லைவில் அவர் கூறுகையில்,இளைஞர்களுக்கு தோனியைப் போல உதவுபவர் வேறு யாருமே இருக்க முடியாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவரிடம் தீர்வு
கிடைக்கும். இளைஞர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பையும், ஆதரவையும் கொடுப்பார்என கூறியுள்ளார்.

குரு தோனி
எனக்கு அவர் குரு மாதிரி. பீல்டிலும் சரி, பீல்டுக்கு வெளியிலும் சரி.
எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகி பிரச்சினையைக் கூறலாம். அவரிடம் தீர்வு உடனடியாக கிடைக்கும். அதேசமயம் முழுத் தீர்வையும் அவர் கொடுக்க மாட்டார்.
நிறைய டிப்ஸ் கொடுப்பார், ஹின்ட் கொடுப்பார். அதிலிருந்து நாம் நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ள முடியும். நம்மையே தீர்வு காணத் தூண்டுவார்.
அந்த வகையில் தோனி சிறந்தவர்.

பாதி வேலை முடிந்தது
தோனி கிரீஸில் இருந்தாலே போதும் பாதி வேலை முடிந்த மாதிரிதான். அவரது தலைக்குள் ஏதாவது திட்டத்தை வைத்திருப்பார். அவரை பின்பற்றி நடந்தாலே போதும். நமக்குரிய வெற்றி நிச்சயம் வந்து விடும் என்று கூறியுள்ளார் பந்த்.
பந்த் ஆரம்பத்தில் நன்றாகவே ஆடி வந்தார். கீப்பிங்கிலும் நன்றாகவே இருந்தார். ஆனால் போகப் போக சொதப்பி விட்டார்.

தோனி விளையாடவில்லை
தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே விளையாடாமல் இருக்கிறார். ஐபிஎல்லை
வெகுவாக எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. தள்ளிப் போய் விட்டது. கொரோனா முடியும் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை. இதனால் தோனியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விட்டது. ஆளாளுக்கு அவரைப் பற்றி கதை எழுத ஆரம்பித்து விட்டனர். இதனால் தோனியின் சகாப்தம்
இருக்கிறதா முடிந்து விட்டதா என்ற விவாதம் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications