அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.. மனம் திறந்த ரிஷப் பண்ட்.. விராட் கோலியிடம் கற்று கொண்டதாக பேச்சு
மெல்போர்ன் : பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
வரும் 23ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.இதற்காக சுமார் 90,000க்கும் மேற்பட்ட டிக்கெட் விற்பனையாகி உள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க தினேஷ் கார்த்திக் உடன் மோதி வருகிறார்.

யாருக்கு இடம்?
ஆனால் பாகிஸ்தான் அணி வலுவான பந்துவீச்சு உடையது என்பதால் தொடக்கத்தில் இந்திய அணியின் இந்த விக்கெட்கள் சரிய வாய்ப்புள்ளது.இதனால் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக ரிஷப் பண்டையும் தினேஷ் கார்த்திகையும் பிளேயிங் லெவனில் சேர்க்க ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் ஐசிசி இணையதளத்திற்கு ரிஷப் பண்ட் பேட்டியளித்துள்ளார்.

ஸ்பெஷலான போட்டி
அதில் பாகிஸ்தானுடன் எப்போது விளையாடினாலும் அது ஸ்பெஷலான ஆட்டமாக இருக்கும் என்பதால், அந்த ஆட்டத்தை சுற்றி பல எதிர்பார்ப்புகள் இருக்கும். எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பல எமோஷன்கள் இருக்கும். அது ஒரு வித்தியாசமான உணர்வு. நீங்கள் மைதானத்திற்கு சென்று பில்டிங் செய்யும் போது உங்களை சுற்றி பெருமளவு மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்துவார்கள்.

திருவிழா
மைதானமே திருவிழா போல் இருக்கும். இந்திய அணி தேசிய கீதத்தை பாடும் போது எனக்கு உடல் முழுவதும் பூரிக்கும்.கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தோல்வியை தழுவினோம். ஆனால் அன்று என்னுடைய ஆட்டம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்ததால் ரன் ரேட்டை அதிகப்படுத்த நாங்கள் அதிரடியாக விளையாடினோம்.

கோலியிடம் கற்று கொண்டேன்
விராட் கோலி இதுபோன்ற சமயங்களில் நமக்கு நிறைய கற்றுத் தருவார். நெருக்கடியான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடம் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் பேட்டிங் செய்வது மிகவும் நல்லது.போட்டியை எப்படி கொண்டு செல்ல வேண்டும் ரன்களை எப்படி அடிக்க வேண்டும் என்பதை அவர் பார்த்துக் கொள்வார் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications