Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ந்து 8 போட்டிகள்... 25 ரன்கள்... ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரிஷப் பந்தின் சாதனை!

மெல்போர்ன் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் துவங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களை அடித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் ரிஷப் பந்த் 29 ரன்களை அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரிஷப் பந்த் விளையாடியுள்ள தொடர் டெஸ்ட் போட்டிகளில் 8வது முறையாக அவர் 25 ரன்களை கடந்து அடித்துள்ளார்.

பகலிரவு போட்டியில் ஆஸி. வெற்றி

பகலிரவு போட்டியில் ஆஸி. வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் முதலில் ஆடிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி கொண்டது.

195 ரன்னில் சுருண்ட ஆஸி.

195 ரன்னில் சுருண்ட ஆஸி.

இந்நிலையில், மெல்போர்னில் இரு அணிகளும் 2வது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. நேற்று துவங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களை அடித்துள்ளது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஸ்கோரை கடந்த இந்தியா

ஸ்கோரை கடந்த இந்தியா

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 195 ரன்களை இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கடந்துள்ளது. கேப்டன் விராட் கோலி இல்லாத இன்றைய போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 29 ரன்களை அடித்துள்ளார்.

8 முறை 25 ரன்கள் கடந்து சாதனை

8 முறை 25 ரன்கள் கடந்து சாதனை

விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இன்றைய போட்டியில் 29 ரன்களை அடித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 8 முறை அவர் 25 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 25, 28, 36, 30, 39, 33, 159 நாட் அவுட் மற்றும் இன்றைய போட்டியில் 29 ரன்களை அவர் அடித்துள்ளார்.

Story first published: Sunday, December 27, 2020, 14:52 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+