Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில ஆடியிருக்காரு பந்த்... 4லயும் அரைசதம் விளாசியிருக்காரு!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Rishabh Pant scored half century in 4th consecutive test in India

முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை அடித்துள்ளது. தற்போது இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை துவக்கியுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பந்த் தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை அவர் ஆடியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்சில் தொடர்ந்து அரைசதத்தை அடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்களை அடித்து ஆல்-அவுட்டாகியுள்ளது. தற்போது இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை துவக்கியுள்ளது. இந்தியாவின் முதல் இன்னிங்சில் ரிஷப் பந்த் அவுட்டாகாமல் 58 ரன்களை அடித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவில் இதுவரை ஆடியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்சில் அவர் தொடர்ந்து அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் ஆடியுள்ள 30 டெஸ்ட் இன்னிங்சில் இது 6வது அரைசதம். கடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டிகளில் முறையே 92 மற்றும் 92 ரன்களையும் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் 91 ரன்களும் அவர் அடித்துள்ளார்.

Story first published: Sunday, February 14, 2021, 11:49 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+