Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: ரிஷப் பண்ட் அபார ஆட்டம்.. தோனியின் ரெக்கார்ட் முறியடிப்பு

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரிஷப் பண்ட் காயமடைந்து 3 ரன்களுடன் வெளியேறினார். ஆனால், இரண்டாம் நாள் ஆட்டத்தின் காலையில் அறிமுக வீரரான சரண்ஷ் ஜெயின் ஆட்டமிழந்த பிறகு, பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். முதல் செஷனில் அவர் 88 பந்துகளில் 63 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்து அபாரமான அரைசதம் கடந்தார்.

இந்த அரைசதத்தை எட்ட இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்டிற்கு 81 பந்துகள் தேவைப்பட்டன. தனது அரைசதத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பே, வெளிநாட்டு மண்ணில் விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார்.

Rishabh Pant

SSC மைதானத்தில் இந்த அரைசதத்தை நோக்கிய பயணத்தின் போது, தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் பட்டியலில் பண்ட் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

IND vs SL: படிக்கலுக்கு 2 கேட்ச் மிஸ்.. சதம் அடித்து அபாரம்.. பலமான நிலையில் இந்திய அணி

IND vs SL: படிக்கலுக்கு 2 கேட்ச் மிஸ்.. சதம் அடித்து அபாரம்.. பலமான நிலையில் இந்திய அணி

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் 36 போட்டிகளில் 2534 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக தோனி 48 போட்டிகளில் 2496 ரன்களுடனும், பாரூக் இன்ஜினியர் 1209 ரன்களுடனும், சையத் கிர்மானி 1109 ரன்களுடனும் மற்றும் கிரண் மோரே 901 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தோனி 2006 முதல் 2014 வரை இந்தியாவிற்காக 48 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2496 ரன்களை எடுத்திருந்தார். தற்போது தனது 36-வது வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரிஷப் பண்ட், 2534 ரன்களுடன் அவரது சாதனையை முறியடித்துள்ளார்.வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் குவித்த சர்வதேச வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது முதலிடத்தில் உள்ளார்.

இலங்கை வீரர் என்ன சொன்னார் தெரியுமா? எதும் தெரியாமல் பேசாதீங்க.. மோதல் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்

Also Read

இலங்கை வீரர் என்ன சொன்னார் தெரியுமா? எதும் தெரியாமல் பேசாதீங்க.. மோதல் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்

சர்பராஸ் அகமது 52 போட்டிகளில் 2696 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் 41 போட்டிகளில் 2634 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 2534 ரன்கள் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் 2514 ரன்கள் மற்றும் தோனி 2496 ரன்கள் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

Story first published: Monday, August 24, 2026, 13:15 [IST]
Other articles published on Aug 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+