ரிஷப் பண்ட் செய்ய வேண்டிய 2 விசயம்.. இதை செய்தால் இந்திய அணியில் இடம் உறுதி.. சிம்பிள் டாஸ்க்
மும்பை : ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்க தொடரில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்க்கு தற்போது அணியில் இடமில்லை.
இந்திய அணியின் எதிர்காலமாக திகழம் ரிஷப் பண்ட் ஃபார்மில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நான் அணியில் வைத்து இருப்பேன் என்று ஹைடன் கூறியுள்ளார்.
தற்போது, இந்திய அணியில் ஜடேஜா இல்லாத நிலையில், இடது கை பேட்ஸ்மேன் கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும்.

இருவருக்குமே இடம்
ஆனால் ரிஷப் பண்ட் பினிஷர் ரோலுக்கு சரி வர மாட்டார். இதனால் அவரை நம்பர் 5வது இடத்தில் பேட்டிங்கில் இறக்குவதே அணிக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் பண்ட்க்காக தினேஷ் கார்த்திக்கையும் தூக்க கூடாது. சொல்லப்போனால் இந்திய அணியில் இவ்விருவருக்கும் இடம் கண்டிப்பாக உள்ளது. அதற்கு ஹர்திக்கை 3வது பவுலராக பயன்படுத்த வேண்டும். இல்லையேனில் ஒரு சுழற்பந்துவீச்சாளரை நீக்க வேண்டும்.

பவுண்டரிகள்
ரிஷப் பண்ட் குறித்து இந்தியா முதலில் தெளிவான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும். அதன் பிறகு ரிஷப் பண்ட் முன் இரண்டு விதமான ஆட்ட அணுகுமுறைகள் இருக்கிறது. ஒன்று பேட்டிங்கில் பந்தை தடுப்பதும் விடுவதும் அவருக்குச் சாதாரணமான ஒன்று. அடுத்து அவரது உடல் வலிமை.இந்த இரண்டையும் பயன்படுத்தி களத்தில் நின்று பந்துகளைத் தேர்வுசெய்து சிக்ஸர்களுக்கு போகாமல் அதிகம் பவுண்டரிகள் விளையாட முயற்சி செய்ய வேண்டும்.

ரிஷப் பண்டின் பிரச்சினை
களத்தில் நிற்க நிற்க எளிதான பந்துகளும் கிடைக்கும். இப்படியான பேட்டிங் அணுகுமுறை ஆஸ்திரேலிய பெரிய மைதானங்களில் சரியான ஒன்றாகவும் இருக்கும். இரண்டாவது, ஆஃப் சைட் வெளியில் புல்-லென்த்தில் வீசப்படும் பந்துகளை, நகராமல் நின்ற இடத்திலிருந்து, அதுவும் நேராக அடிக்க முயற்சி செய்வது இவரது பலவீனம். மேலும் நின்ற இடத்திலிருந்து ஆஃப் சைட் வெளியில் வீசப்படும் பந்துகளை ஆடுவது பிரச்சனையாக இருக்கிறது.

அதிரடி பேட்டிங்
இதனால் எதிரணி பந்துவீச்சு திட்டத்தை உடைக்க, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அன்-ஆர்த்தடாக்ஸ் ஷாட்களை பயன்படுத்த வேண்டும். இதை தான் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும் கூறி இருக்கிறார். .இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பர் என்கின்ற முடிவுக்கு வருவதும், ரிஷப் பண்ட் அதிகம் பவுண்டரிகளை அடிக்கும் ஆட்டம் முறையைத் தேர்வு செய்வதும், வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு நல்ல விஷயமாக அமைய கூடும்.


Click it and Unblock the Notifications