Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அழகு ஓவியம்! ரிஷப் பண்ட்க்கு இப்படி ஒரு சகோதரியா? தம்பிக்கு துணையாக நின்றவரின் கதை

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு உச்சத்திற்கு வந்திருக்கிறார் என்று அனைவருக்குமே தெரியும். டெல்லியில் உள்ள சீக்கியர்கள் கோவிலில் தங்கி அங்கு வழங்கப்படும் உணவை அருந்தி கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு தற்போது புகழின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்.

வாழ்க்கையில் உயரத்தில் இருந்த போது பண்ட்க்கு ஏற்பட்ட விபத்து அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இந்த நிலையில் அதிலிருந்து மீண்டு தற்போது ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

rishabh pant

இப்படி கடினமான காலங்களில் ஒரு மனிதனால் தன்னால் சுயமாக மீள முடியாது. அதற்கு அவருக்கு உறுதுணையாக நண்பர்கள், குடும்பத்தினர்,மனைவி போன்றவர்கள் தேவை. இந்த நிலையில் ரிஷப் பண்ட் வாழ்க்கையில், அவருடைய அக்கா சாக்சி பண்ட் மிகவும் முக்கிய பங்காற்று இருக்கிறார்.

ரிஷப் பண்டின் அக்கா சாக்சி பண்ட் யார் என்பதை தற்போது பார்க்கலாம். பார்ப்பதற்கு மாடல் போல் இருக்கும் சாக்ஷி பண்ட் படிப்பில் சுட்டியாக இருந்திருக்கிறார். சாக்ஷி பண்ட் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் நேஷனல் பார்மசி அசோசியேஷனில் தற்போது சாக்சி பண்ட் பணிபுரிந்து வருகிறார்.

இதேபோன்று லிஸ்டர் மருத்துவமனையிலும் ரிஷப் பண்டின் சகோதரி பணிபுரிந்து இருக்கிறார். கல்வி, வேலை என்ற விஷயங்களுக்கு நேரம் போக சாக்சி பண்ட், சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கின்றார். தன் வாழ்க்கையில் நடைபெறும் சின்ன சின்ன விஷயங்களை அவ்வப்போது புகைப்படமாக சாக்சி பதிவிடுகிறார்.

இதில் சாக்சி பண்டின் அழகைப் பார்த்து பலரும் அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்கின்றனர். அவருக்கு சமூக வலைத்தளத்தில் இரண்டு லட்சம் பாலோர்கள் இருக்கிறார்கள். பல பெண்கள் கிளாமராக உடைகளை அணிந்து புகைப்படம் போடும் நிலையில் சாக்சி பண்ட், அந்த வழியில் செல்வது கிடையாது. குடும்பப் பெண்ணாக அவர் போடும் பதிவுகளுக்கு லைக்ஸ்கள் அள்ளுகிறது.

ரிஷப் பண்ட் விபத்தில் அடிபட்டு இருந்தபோது அவருடைய அக்காவான சாக்க்ஷி அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். பண்டின் வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் அவருடைய அக்கா முக்கிய பங்கு ஆற்று இருக்கிறார். இதேபோன்று தனது தந்தை இறந்தபோது ரிஷப் பண்ட் தமக்கு உறுதுணையாக இருந்ததாகவும் சாக்சி பலமுறை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சாக்சி, இவ்வளவு அழகாக இருந்தாலும் அவர் சிங்கிள் கிடையாது. லண்டனில் உள்ள ஒரு தொழிலதிபரான அன்கிட் சவுத்ரி என்ற நபரை சாக்சி பண்ட் காதலித்து நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். இந்த செய்தியை கேட்டு பல ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, January 22, 2025, 11:36 [IST]
Other articles published on Jan 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+