Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு மோசமாக நடந்துக்கொள்வதா??.. லெஜெண்ட் பட நடிகையை விளாசிய ரிஷப் பண்ட்.. வெடிக்கும் சர்ச்சை!!

டெல்லி: நடிகை ஊர்வசி ரவுத்தேலா குறித்து கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் போட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுத்தேலா. சமீபத்தில் தமிழில் லெஜெண்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது கொடுத்துள்ள தொலைக்காட்சி பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 அப்படி என்ன கூறினார்

அப்படி என்ன கூறினார்

பாலிவுட் ஹங்காமா தொலைகாட்சியில் கொடுத்த நேர்காணலில் பேசிய ஊர்வசி ரவுத்தேலா, ஒருமுறை டெல்லியில் ஒரு நிகழ்ச்சிகாக சென்றிருந்த போது 10 மணி நேரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால் 'RP' என்ற எழுத்துகளில் பெயர் தொடங்கும் பிரபலம் எனக்காக ஹோட்டலில் பல மணி நேரம் என்னை காண காத்திருந்தார். என்னுடன் பேசுவதற்காக போராடியிருந்துள்ளார் எனக் கூறினார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

அவர் RP எனக்கூறும் பிரபலம் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தான். கடந்த 2018ம் ஆண்டு ரிஷப் பண்ட் - ஊர்வசி இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் பலமுறை அவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் 2019ம் ஆண்டு ரிஷப் பண்ட் அதனை முற்றிலும் மறுத்தார். மேலும் நடிகை இஷா நேகி தான் தனது காதலி எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இருவருக்கும் இடையே ஏற்கனவே இப்படி ஒரு பிரச்சினை இருக்கும் சூழலில் தான் ரிஷப் பண்ட் குறித்து ஊர்வசி ரவுத்தேலா இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரர், ஒரு நடிகைக்காக நீண்ட நேரம் காத்திருந்து பேசினாரா என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பண்ட் பதிலடி

பண்ட் பதிலடி

இந்நிலையில் ரிஷப் பண்ட் இதுகுறித்து காட்டமான பதில் கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்ட அவர், பிரபலமடைவதற்காக சிலர் நேர்காணலில் இந்த அளவிற்கு கூட பொய் கூறுவார்களா என்பது வேடிக்கையாக உள்ளது. மற்றொருபுறம் பெயர் புகழுக்காக, ஒருவர் இப்படியும் அலைகிறார்களா என்று வருத்தமாகவும் உள்ளது. அவர்களுக்கு கடவுள் தான் நல்வழி காட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

The Legend Movie Review | Yessa ? Bussa ?| The Legend | J. D.–Jerry |*Review
பின் வாங்கிய பண்ட்

பின் வாங்கிய பண்ட்

இந்த பதிவை போட்ட 10 நிமிடங்களுக்குள் ரிஷப் பண்ட் நீக்கிவிட்டார். எனினும் அதுகுறித்த ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து வைத்த ரசிகர்கள், தற்போது பண்ட்-க்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர். பண்ட் தற்போது இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இந்த சமயத்தில் அவரின் பெயர் இப்படி விமர்சிக்கப்படுவது அவரின் கிரிக்கெட் வாழ்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, August 12, 2022, 12:18 [IST]
Other articles published on Aug 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+