Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? வீரர்களை விட்டு கொடுக்காத ரிஷப் பண்ட்.. கேப்டனாக கொடுத்த உறுதி

டெல்லி: இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், முதல் போட்டியிலேயே தோல்வியை அடைந்திருக்கிறார்.

Recommended Video

India அதிர்ச்சி தோல்வி! மிரட்டிய Miller, Rassie | Aanee's Appeal | IND vs SA | *Cricket

ஆனால், இது போன்ற சிறிய மைதானங்களில் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து எதிரணிக்கு நெருக்கடி தருவது முடியாத காரியம்.

இந்த நிலையில், போட்டி முடிந்ததும் இரு அணி கேப்டன்களும் அளித்துள்ள பேட்டியை தற்போது காணலாம்.

பேட்டிங்கிற்கு சாதகம்

பேட்டிங்கிற்கு சாதகம்

இந்தியாவில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட பெவுமா, வெற்றியுடன் பயணத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. வெற்றி குறித்து பேசிய பெவுமா, எங்கள் வீரர்களின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி அளிக்கிறது. இரவு நேரம் ஆக ஆக, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.

வெற்றிக்கான காரணம்

வெற்றிக்கான காரணம்

இஷான் கிஷன சிறப்பாக விளையாடினார். எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். வெண்டர் டுசனும், மில்லரும் ஆடுகளத்தை சரியாக கணித்து விளையாடியுள்ளனர். டேவிட் மில்லர் அதிரடியாக ஆடியது, வெண்டர் டுசன் மீதான அழுத்தத்தை குறைத்தது. இன்னும் நாங்கள் சில பகுதியில் உள்ள குறையை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

ஆட்ட நாயகன் விருது வென்ற டேவிட் மில்லர் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக கடின உழைப்பை மேற்கொண்டேன். என் திறமை மீது நம்பிக்கை கொண்டேன். ஐபிஎல் அனுபவமும் நிச்சயம் கைக் கொடுத்தது. ரன்களை துரத்தும் போது, பந்தை வீணடிக்காமல் விளையாட வேண்டும். அதில் தான் நாங்கள் இருவரும் கவனம் செலுத்தினோம்.

ரிஷப் பண்ட் பாராட்டு

ரிஷப் பண்ட் பாராட்டு

இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பண்ட், சில சமயங்கள் நாம் எதிரணிக்கு முழு பாராட்டையும் தெரிவிக்க வேண்டும். மில்லருக்கு எதிராக வகுத்த யுத்திகளை எல்லாம் அவர் சிறப்பாக கையாண்டார். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. சில யுத்திகளை நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. மெதுவான பந்துகளை நாங்கள் அடிக்க சிரமப்பட்டோம். ஆனால் ஆடுகள சூழல் மாறியதால், எதிரணி அதனை சுலபமாக எதிர்கொண்டனர். அடுத்த போட்டியில் நாங்கள் பலமாக திரும்பி வருவோம்.

Story first published: Thursday, June 9, 2022, 23:24 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+