Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் கத்துக்க வேண்டிய விஷயம் இன்னும் நிறைய இருக்கு... இளம் வீரருக்கு புஜாரா ஆலோசனை!

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்நிலையில், கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இன்னும் அதிகமாக உள்ளதாக சத்தீஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

4வது நாள் ஆட்டம்

4வது நாள் ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தை இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடி வருகின்றனர். நேற்றைய தினம் ரிஷப் பந்த் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கைகொடுத்த பார்ட்னர்ஷிப்

கைகொடுத்த பார்ட்னர்ஷிப்

73க்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில் களமிறங்கிய சத்தீஸ்வர் புஜாரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய அணியின் ரன்களை உயர்த்தினர். புஜாரா 73 ரன்களும் ரிஷப் பந்த் 91 ரன்களும் அடித்து அதகளம் செய்தனர். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்துள்ளது.

சதமடிக்கும் வாய்ப்பு

சதமடிக்கும் வாய்ப்பு

சமீப காலங்களில் ரிஷப் பந்த் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவரது பங்கு சிறப்பாக இருந்தது. ஆயினும் சதமடிக்கும் வாய்ப்பை அவர் அந்த தொடரில் மட்டுமின்றி நேற்றைய போட்டியிலும் தவற விட்டுள்ளார்.

அதிகம் கற்க வேண்டும்

அதிகம் கற்க வேண்டும்

இந்நிலையில் கிரிக்கெட்டில் பந்த் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளதாக புஜாரா அறிவுறுத்தியுள்ளார். பந்த் நேற்றைய ஆட்டத்தில் விளையாடியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆட்டத்தின்மூலம் அவர் இந்திய அணியை மேலும் வலிமையாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

புஜாரா ஆலோசனை

புஜாரா ஆலோசனை

நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்றும் எந்த ஷாட்டை தவிர்க்க வேண்டும் என்றும் பந்த் மேலும் கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டிய புஜாரா, அவர் விரைவில் அனைத்தையும் கற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 8, 2021, 10:46 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+