For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்வளவு ரிஸ்க்கா எடுப்பது??.. உணர்ச்சிவசப்பட்டு ரிஷப் பண்ட் எடுத்த முடிவு.. இந்திய அணிக்கு பின்னடைவு

ராஜ்கோட்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் பெரும் ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார்.

இரு அணிகளும் மோதும் இந்த 4வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2 - 1 முன்னிலை வகிக்கும் நிலையில் இந்த போட்டி நடைபெறுகிறது.

4வது டி20

4வது டி20

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் பெரும் மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 3வது போட்டியிலும் எந்தவித மாற்றமும் செய்யாமல் களமிறங்கியது. இதில் சில வீரர்கள் கம்பேக் தந்த போதும், ஆவேஷ் கான் மட்டும் தொடர்ந்து சொதப்பினார்.

பண்ட் எடுத்த ரிஸ்க்

பண்ட் எடுத்த ரிஸ்க்

ஆவேஷ் கானின் பந்துவீச்சை, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நன்றாக கணித்துவிடுவதால், அதிகளவில் ரன்கள் கசிகின்றன. எனவே அவருக்கு மாற்றாம அர்ஷ்தீப் சிங் அல்லது உம்ரான் மாலிக்கை களமிறக்க வேண்டும் என வல்லுநர்கள் பரிந்துரைத்திருந்தனர். ஆனால் இந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

இந்நிலையில் இது இந்திய அணியின் தோல்விக்கே வழிவகுக்கலாம். தொடர்ந்து 4வது போட்டியில் ஒரே விதமான வீரர்கள் இருப்பதால், அவர்களின் வியூகம் மற்றும் செயல்பாடுகளை எதிரணி தெரிந்துக்கொண்டிருக்கும். இதுமட்டுமல்லாமல் குயிண்டன் டிக்காக், மார்கோ யான்சன், லுங்கி ங்கிடி போன்ற வீரர்களும் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய பவுலர்கள் குறித்தும், வியூகம் குறித்து நன்கு தெரியும்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இன்றைய போட்டி நடைபெறும் பிட்ச்- பேட்டிங்கிற்கு நன்கு உதவக்கூடும் என்பதால், அதிக ஸ்கோர் போட்டியாக இருக்கலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணி 180+ ரன்களை அடித்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். இந்திய அணி ஒருவேளை 170க்கு குறைவாக ரன்களை அடித்துவிட்டால், வெற்றி வாய்ப்பு குறையும்.

Story first published: Friday, June 17, 2022, 20:05 [IST]
Other articles published on Jun 17, 2022
English summary
Rishabh pant take a huge risk in India vs South africa 4th t20 match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+