“இவ்வளவு பெரிய ரிஸ்க்கா எடுப்பது?” வாழ்வா? சாவா? சூழலில் பண்ட் எடுத்த முடிவு.. ரசிகர்கள் அதிருப்தி!
விசாகப்பட்டினம்: வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் கூட இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் ரிஸ்க் எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
Recommended Video
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.
முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், தொடரில் நீடிப்பதற்கான முக்கியப்போட்டி இன்று நடைபெறுகிறது.

முக்கியமான போட்டி
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விசாகப்பட்டினம் மைதானம் இதுவரை பவுலர்களுக்கு சாதகமாக தான் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்தியா வெற்றி பெற வேண்டியது அவசியம்.

ரிஷப் பண்ட்-ன் ரிஸ்க்
இந்நிலையில் அதில்தான் ரிஷப் பண்ட் பெரும் ரிஸ்க் எடுத்துள்ளார். அதாவது கடந்த 2 போட்டிகளிலும் பவுலிங் படை மிக மோசமாக இருந்தது. அக்ஷர் பட்டேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். வேகப்பந்துவீச்சில் ஆவேஷ் கானும் ஏமாற்றத்தை கொடுத்தார். எனவே இன்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, ரவி பிஷ்னாய் ஆகியோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

டிராவிட்டின் யோசனை
ஆனால் பழைய அணியுடனேயே களமிறங்குவதாக ரிஷப் பண்ட் அறிவித்துள்ளார். ஒரு வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தால் தான் ஃபார்முக்கு வருவார்கள் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பக்கூடியவர். ஆனால் முக்கியமான போட்டியில் கூட இதே ஃபார்முலாவை பயன்படுத்துவதா? என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ப்ளேயிங் 11 விவரம்
இந்திய அணி : ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், ஆவேஷ் கான்


Click it and Unblock the Notifications