Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உஷாரான ரிஷப் பண்ட்.. பயிற்சி முகாமில் எடுத்த திடீர் முடிவு.. இந்திய அணிக்குள் புதிய குழப்பம்- விவரம்

டெல்லி: இந்திய அணியில் இடம் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்தில் ரிஷப் பண்ட் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த தொடர் வரும் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

 இந்திய அணியில் குழப்பம்

இந்திய அணியில் குழப்பம்

இந்த தொடருக்கான இந்திய அணியில் தான் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என ஐபிஎல்-ல் கம்பேக் தந்த வீரர்கள் இந்திய அணிக்கும் திரும்பியுள்ளனர். ஏற்கனவே அங்கு ரிஷப் பண்ட்-ம் உள்ளதால், எப்படி ப்ளேயிங் 11 அமையப்போகிறது என்ற குழப்பம் இருந்து வந்தன. இதில் பண்ட்-ஐ நீக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ஏனென்றால் ஆட்டத்தின் சூழல் எதையுமே பார்க்காமல் ரிஷப் பண்ட் எப்போதும் அதிரடி மட்டுமே காட்டி வருகிறார். இதனால் தவறான ஷாட்களை ஆடி பொறுப்பின்றி வெளியேறுகிறார். விக்கெட் கீப்பிங் தான் அவரை காப்பாற்றி வந்தது. ஆனால் தற்போது தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபினிஷர் என 2 பணிகளையும் பூர்த்தி செய்வதால், அவரின் மீது கவனம் திரும்பியுள்ளது. இதே போல ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டருக்கு சென்றுவிடுவார்.

 பண்ட் எடுத்த முயற்சி

பண்ட் எடுத்த முயற்சி

இந்நிலையில் ரிஷப் பண்ட் உஷாராகியுள்ளார். நேற்று இந்திய அணி தனது முதல் நாள் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டது. இதில் ஹர்திக் பாண்டியா கலந்துக்கொள்ளாத சூழலில், ரிஷப் பண்ட் மட்டும் நீண்ட நேரமாக வலைப்பயிற்சி செய்து வந்துள்ளார். பண்ட், பந்தை டைமிங் செய்வதில் கோட்டைவிடுவதால், கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். எனவே ஷாட்களை மாற்றி அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உம்ரான் பவுலிங்

உம்ரான் பவுலிங்

நேற்று வலைக்குள், 150+கிமீ வேகத்திற்கு மேல் உம்ரான் மாலிக் தொடர்ந்து பவுலிங் வீச, ரிஷப் பண்ட் அதனை சரியான டைமிங்கில் சிக்ஸருக்கு அடிக்க முயன்றார். இதன்மூலம் எவ்வளவு வேகமான பந்து வந்தாலும், சரியாக டைமிங் செய்ய முடியும். இதனால் இந்திய அணிக்குள் இருந்த போட்டி தற்போது சூடுபிடித்துள்ளது.

Story first published: Tuesday, June 7, 2022, 14:59 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+