Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி..! பேட்டிங் மட்டுமல்ல.. பீல்டிங்கும் ஒழுங்கா பண்ணணும்... இந்திய இளம் வீரரை எச்சரித்த கோச்

லண்டன்: இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பன்ட் பீல்டிங்கில் முன்னேற்றி கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

Rishabh pant to work on fielding, says coach sridhar

நேற்றைய போட்டியின்போது பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டு இருந்தார். அவரது பீல்டிங்கில் பல சொதப்பல்கள் இருந்தன. இந்நிலையில் ரிஷப் பன்ட் பீல்டிங்கில் இன்னும் நிறைய முன்னேற வேண்டும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பன்ட் பீல்டிங் குறித்து பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியதாவது: ரிஷப் பன்டுக்கு பீல்டிங் குறித்து அதிக அளவில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக அவர் பந்தை த்ரோ செய்யும் டெக்னிக்கலில் முன்னேற்றம் அவசியம்.

அதுதவிர, அவுட்பீல்டு பகுதியில் வேகமாக ஓட வேண்டும். அவரை நாங்கள் பீல்டிங் பகுதியில் பயன்படுத்தி வருகிறோம். அவருக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தை ஒதுக்கி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது குறைந்தது 5 ரன்களையாவது பீல்டிங்கின் போது சேமித்திருப்பார். இது அணிக்கு போனசாக அமைந்தது. சிறப்பாக கேட்சையும் பிடித்திருக்கிறார் என்றார்.

Story first published: Wednesday, July 3, 2019, 21:55 [IST]
Other articles published on Jul 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+