Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களிடம் பேச காசு கேட்கும் ரிஷப் பண்ட்.. இனி பண்ட் வீடியோவை பார்க்க பணம் கட்டனும்.. விவரம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சமூக வலைத்தளத்தில் செய்துள்ள ஒரு மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது. கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார்.

லக்னோ அணி ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்றார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கக்கூடிய நபர். ஏற்கனவே கோடியில் புரளும் பண்ட், தற்போது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ஒரு மாற்றத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

Rishabh Pant

அதன்படி இனி ரிஷப் பண்ட் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் மாதம் தோறும் பணம் கட்ட வேண்டும் என்று முறைக்கு அவர் தனது பக்கத்தை மாற்றி உள்ளார். அதாவது பிரத்தேகமான வீடியோக்கள் மற்றும் தம்மிடம் கேள்விகளை கேட்க வேண்டுமென்றால் இந்த பணத்தை ரசிகர்கள் செலுத்தி ஆக வேண்டும்.

இதற்கு கட்டணமாக பண்ட், மாதத்திற்கு 390 ரூபாய் கட்ட வேண்டும். பண்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் பண்ட், வீடியோ பிரத்யேமாக பார்க்க வெறும் 220 பேர் மட்டும் தான் பணம் செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் பண்டின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை பெற்று இருப்பதையே காண முடிகிறது. பலரும் பண்டின் இந்த முடிவை கேலி செய்கின்றனர்.

ரிஷப் பண்ட், இவ்வாறு செய்வார் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் உடன் பேச, ஏன் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சில பெண்கள் தான் பிரத்யேக வீடியோவை போடுவதை பார்க்க பணம் வசூலிப்பார்கள் என்றும், பண்ட் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இவ்வளவு கோடி கணக்கில் சம்பாதிக்கும் பண்ட், instagram-ல் ஏன் பணத்தை சம்பாதிக்கும் முடிவை எடுத்து இருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Story first published: Wednesday, August 13, 2025, 15:32 [IST]
Other articles published on Aug 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+