Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்க்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி.. உடல் உறுப்புகள் குறித்து வெளியான அறிக்கை.. முழு விவரம்

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்றாலும் ரிஷப் பண்ட் ஒரு மாத காலம் வரை மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ரிஷப் பண்ட் உடல் நிலையை கண்காணிக்க தனியாக ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலில் நேற்று முதல் கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இதில் ரிஷப் பண்டிற்கு நெற்றியில் இரண்டு இடத்தில் வெட்டு ஏற்பட்டு இருந்தது.கணுக்கால் பாதம் கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது .

பிளாஸ்டிக் சர்ஜரி

பிளாஸ்டிக் சர்ஜரி

இந்த நிலையில் ரிஷப் பண்ட் முதுகில் பல்வேறு இடங்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பரிசோதித்த மருத்துவர்கள் இன்று அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய உள்ளனர். முகம், முதுகில் ஏற்பட்டிருக்கும் காயத்தை சரி செய்ய இந்த சர்ஜரி நடக்க உள்ளது. மேலும் ரிஷப் பண்டிற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.

உள் காயம் ஏதும் இல்லை

உள் காயம் ஏதும் இல்லை

ரிஷப் பண்டிற்கு தலையில் அடிபட்டதால் வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்து இந்த சோதனை நடைபெற்றது.ஆனால் அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் மூளையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .மேலும் மற்ற உடல் உறுப்புகளும் சரியாக இயங்குவதால் உள் காயம் ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முதுகு தண்டு

முதுகு தண்டு

இதனால் ரிஷப் பண்ட் தனது வெளி காயங்களுக்கான சிகிச்சை மேற்கொண்டாலே போதுமானது. பொதுவாக காலில் அடிபட்டு சிகிச்சை எடுக்க எவ்வளவு நாள் ஆகுமோ அதே போன்ற ஒரு நிலை தான் தற்போது பண்ட்க்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ரிஷப்பண்டின் முதுகு தண்டிலும் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்திருப்பது ரசிகர்களிடையே நிம்மதி பெருமூச்சு ஏற்படுத்தி இருக்கிறது .

எப்போது வருவார்

எப்போது வருவார்

இதனால் பண்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் ஆறு மாத கால இடைவெளியில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் பழைய மாதிரி அதை உத்வேகத்துடன் விளையாடுவாரா என கவலை அடைந்துள்ளனர். ரிஷப் பண்ட் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பு கிரிக்கெட்டுக்கு திரும்ப அனைத்து சாத்திய கூறுகளும் ஏற்பட்டுள்ளன.

Story first published: Saturday, December 31, 2022, 10:16 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+