மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாள் நெருங்கிக் கொண்டு உள்ள நிலையில் பல்வேறு வீரர்கள் பற்றி செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் என்ன ஆனார் என்று பிசிசிஐ தரப்பும் மௌனம் காத்து வருகிறது.
இந்திய அணியின் முக்கிய வீரரும் விக்கெட் கீப்பருமாக விளங்கிய ரிஷப் பந்த் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ரிஷப் பன்ட் இருக்கிறார்.

இதனால் ரிஷப் பண்ட் ரசிகர்கள் அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள். இதேபோன்று கே எல் ராகுல் குறித்தெல்லாம் அடிக்கடி அப்டேட் கொடுக்கும் பிசிசிஐ ரிஷப் பண்ட் குறித்து ஏன் பேசவில்லை என்று பலரும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரிஷப் பண்ட் நாம் நினைத்ததை விட பெரிய காயத்தில் தான் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.
இதனால் அவர் இனி கிரிக்கெட் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். முழு உடல் தகுதியை எட்டினாலும் விக்கெட் கீப்பருக்கு என சில உடல் தகுதி வேண்டும். அதனை அவர் எட்டுவது அவ்வளவு சீக்கிரம் நடைபெறாது என்று கூறப்படுகிறது. மேலும் உடல் தகுதியை ரிஷப் பண்ட் கூட அவர் பழைய மாதிரி கிரிக்கெட்டின் பார்மில் இருப்பாரா என்றும் தெரியவில்லை. இதனால் பேட்டிங்கில் மீண்டும் பயிற்சி செய்து விட்டு சில போட்டிகளில் விளையாட விட்டு அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்த்து தான் ரிஷப் பன்ட் இந்திய அணிக்கு திரும்புவார்.
ஆனால் அதற்கு எல்லாம் தற்போது நேரம் இல்லை. இதனால் தான் ரிஷப் பண்ட், அப்படியே விட்டுவிட்டு அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற தேடும் முயற்சியில் இந்திய அணி இறங்கிவிட்டது. இதனால்தான் சாம்சன் இஷான் கிஷன் ஆகியோரின் பெயர் அடிக்கடி அடிபடுகிறது. இதனால் தான் இருவரையும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்ப குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சம் இன்னும் ஒரு ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரிஷப் பண்டை எதிர்பார்த்து இருக்க வேண்டாம் என்ற முடிவில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது.