Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு கேட்ச், ஸ்டம்ப் அவுட்ட மிஸ் பண்ணா ஆட்டமே மாறிடும்... அத மாதிரி சான்ஸ் எடுக்காதீங்க

டெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பில் டெல்லி போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

Rishabh Pant which advised the people about this lockdown

இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து வெளிவர மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றவும் அவர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Rishabh Pant urged People to Support Delhi Police

ஒரு கேட்ச் மற்றும் ஸ்டம்ப் அவுட் மிஸ் செய்யப்பட்டால், அதனால் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும் என்றும் அதுபோன்ற சான்ஸ் எடுக்க வேண்டாம் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் சிலர் காவல்துறையினரின் அறிவுரையை மதிக்காமல், பல இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் கொரோனா குறித்த மத்திய அரசின் நெறிமுறைகளையும் சிலர் பின்பற்றாமல் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசை மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், டெல்லி காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் தவறவிடப்படும் ஒரு கேட்ச் மற்றும் ஸ்டம்ப் அவுட், அந்த ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என்று கூறியுள்ள ரிஷப் பந்த், அதேபோல இந்த நெருக்கடி சமயத்தில் நாம் செய்யும் சிறிய தவறு, கொரோனாவிற்கு எதிரான போரை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான இந்த போரில் வீட்டிலேயே இருந்து முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே வெளியில் வந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என்றும் அவர் வீடியோ ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Story first published: Tuesday, April 21, 2020, 14:33 [IST]
Other articles published on Apr 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+