எத்தனை தடவை சொல்றது.. தல வேற நான் வேற… விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சு போன வீரர்
மும்பை: தோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்.. ஆகவே அவரோடு என்னை ஒப்பிட வேண்டாம் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தல தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட அவரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை எழுப்பியது.
அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து பின்னர் தொடரையும் இழந்தது. இந்திய அணியின் தோல்விக்கு அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் சரியாக இல்லாததே காரணம் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

தோல்வியால் அதிருப்தி
ரிஷப் பண்ட் தோனியின் ஸ்டைலை காப்பியடிக்க முயற்சித்தார். அதனால் தான் முக்கியமான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதாக ரசிகர்கள் பொரிந்து தள்ளிவிட்டார். சமூக வலைதளங்களில் பண்ட்டை கடுமையாக பலரும் விமர்சித்தனர்.

தோனி பெஸ்ட்
இந்நிலையில் இதுகுறித்து ரிஷப் பண்ட் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: தோனி ஒரு தலைசிறந்த வீரர். , வளரும் வீரரான என்னை, தோனியுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்.

ஆலோசனைகள்
தன்னுடைய விக்கெட் கீப்பிங் பணியை மேம்படுத்திக்கொள்ள தோனியிடம் தான் ஆலோசனைகளை பெற்று வருகிறேன். தோனியின் ஒப்பிடுவது பற்றி நான் எப்போதும் அதிகமாக யோசிக்க மாட்டேன்.

தோனி ஜாம்பவான்
தோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான். ஆகவே அவரோடு என்னை ஒப்பிடவேண்டாம்.

மேம்படுத்த முயற்சி
மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் விளையாட்டு திறனை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். கோலியிடம் இருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications