கொஞ்சம் கம்முனு இருங்க ரிஷப் பண்ட்.. லெஜண்ட் நடிகை புகார் கொடுத்தால், வாழ்க்கையே போய்டும்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் லெஜண்ட் படத்தில் நடித்த ஊர்வசி ரத்துலா ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை சூடு பிடித்துள்ளது.
ஆர் பி என்று அழைக்கப்படும் நபர் தம்மை காண 10 மணி நேரம் காத்திருந்ததாகவும், 17 முறை தொலைப்பேசியில் அழைத்ததாகவும் கூறி இருந்தார்.
அவர் பெயரை முழுமையாக குறிப்பிடாத நிலையில், ரிஷப் பண்ட் தற்போது வாண்டட்டாக வண்டியில் ஏறி சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

என்ன பிரச்சினை
சில பேர் வீண் விளம்பரத்திற்காக இப்படி பேசுவதாக மறைமுகமாக ஊர்வசியை சாடி பதிவிட்டு இருந்தார். பிறகு அதை நீக்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஊர்வசி, அடேய் சின்ன பயலே ஒழுங்கா கிரிக்கெட் மட்டும் ஆடு என்று பதிவிட்டு பதிலடி தந்துள்ளார். இதற்கு ரிஷப் பண்ட் ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

ரசிகர்கள் பதிலடி
ரிஷப் பண்ட் கிரிக்கெட் ஆடும் போதே 3 பந்துகளுக்கு மேல் அடிக்காமல் காத்திருக்க மாட்டார். அவர் ஏன் உங்களுக்காக 10 மணி நேரம் காத்து கொள்ள போகிறார். நீங்கள் தான், ரிஷப் பண்டின் ஒவ்வொரு டிவிட்டையும் லைக் போட்டு ஃபாலோ செய்து இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இவ்விருவரும் ஒரு காலத்தில் ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர்.

ரிஷப் பண்ட்க்கு சிக்கல்
பிறகு இருவருக்கும் விரிசல் ஏற்பட்டு, அவரவர் தங்களது பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், இந்த பிரச்சினை பூதாகரமாக மாறினால், அது ரிஷப் பண்ட்க்கு தாக் சட்ட சிக்கலை தரும். ஒருவேளை ரிஷப் பண்ட் உண்மையிலேயே 17 முறை கால் செய்து, ஏதாவது வில்லங்க மெசேஜ் அனுப்பி இருந்து, அதற்கான ஆதாரத்தை ஊர்வசி காட்டினாலோ , அதோடு ரிஷப் பண்டின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும்.

வாழ்க்கையே போய்டும்
பெண்களை உற்று நோக்கி பார்த்தாலே சிறை தண்டனை என்று சட்டத்தில் இடம் உள்ள நிலையில், என்னை தொந்தரவு செய்தார் என்று ஊர்வசி புகார் அளித்தால், ரிஷப் பண்ட் கிரிக்கெட்டை மறந்துவிட வேண்டியது தான். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் ஆபாச மெசேஜை அனுப்பி சிக்கி தனது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தார். இதனால் ரிஷப் பண்ட் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது.


Click it and Unblock the Notifications