Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப ஏமாற்றமா இருக்கு..ரிஷப் பண்ட் மட்டும் இருந்திருந்தால் கதையே வேற..பாக்.முன்னாள் வீரர் புகழாரம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் பந்து வீச்சில் இந்தியா சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் கீழ் வரிசை வீரர்கள் அணியை பல்வேறு போட்டியில் காப்பாற்றுகிறார்கள்.

இந்த பணியை முதன்மையாக செய்தவர் என்றால் அது நமது ரிஷப் பண்ட் தான். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் ரிஷப் பன்ட் இன்னும் தனது திறமையை நிரூபிக்கவில்லை.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த கில்கிறிஸ்ட் என்று பெயர் வாங்கியவர் ரிஷப் பண்ட் தான்.

பின்னடைவு

பின்னடைவு

ஆனால் ரிஷப் பன்ட் தற்போது காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இல்லை. அவருக்கு பதிலாக களமிறங்கிய கே எஸ் பரத் விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்தாலும், பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இன்னும் அவர் ஒரு முறை கூட அரை சதம் அடிக்க வில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

 மிஸ் செய்கிறேன்

மிஸ் செய்கிறேன்

இந்தூர் டெஸ்ட் போட்டியில் கூட முதல் இன்னிங்ஸில் கே எஸ் பரத் 17 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று ரன்களிலும் ஆட்டம் இழந்தார். பரத் மட்டும் அதிரடியாக விளையாடி ஒரு அரை சதம் அடித்திருந்தால், இந்தியாவின் ஸ்கோர் எங்கேயோ சென்றிருக்கும். இந்த நிலையில் தான் ரசிகர்கள் ரிஷப் பண்டை வெகுவாக மிஸ் செய்கிறார்கள்.

ஒரு கை பார்த்திருப்பார்

ஒரு கை பார்த்திருப்பார்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஸ் கனேரியா, ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என்று நீங்கள் ரிஷப் பண்டிடம் கேட்டு இருந்தால், அவர் கால்களை பயன்படுத்தி இறங்கி வந்து பந்தை பவுண்டரிகளுக்கு பறக்க விட வேண்டும் என்று தான் கூறியிருப்பார். ரிஷப் மட்டும் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்திருப்பார். அவருடைய அதிரடி ஆட்டம் மூலம் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீசும் முறையே அவர் மாற்ற வைத்திருப்பார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்தியா மட்டும் சரியாக விளையாடி இருந்தால் அவர்கள் முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் இருந்து 300 ரன்கள் வரை அடித்து இருப்பார்கள். ஆனால் தேவையில்லாத ஷாட் ஆடி ஆஸ்திரேலியா விரித்த வலையில் சிக்கிவிட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் தான் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ஆஸ்திரேலியா 80 சதவீதம் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கனேரியா கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 2, 2023, 18:36 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+