Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்திற்கு ரொமான்டிக் மெசேஜ் அனுப்பிய ரித்திகா... வெற்றியின் ரகசியம் இதுதான்!

இந்தூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய டி-20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும் இது. அதேபோல் இந்தூரில் நடந்த இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். தற்போது அந்த சதம் அடித்ததற்கான ரகசியம் குறித்து அவர் டிவிட்டரில் போஸ்ட் செய்து இருக்கிறார்.

சதம் அடித்த ரோஹித்

சதம் அடித்த ரோஹித்

இலங்கை மற்றும் இந்தியா மோதிய இரண்டாவது டி-20 போட்டியில் ரோஹித் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 43 பந்துகள் பிடித்த இவர் 10 சிக்ஸ்களும், 12 பவுண்டரிகளும் அடித்தார். இதன் மூலம் 118 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய இவர் சமீரா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.இவர் தனது 100 ரன்னை வெறும் 35 பந்தில் அடித்தார். இதன் மூலம் டி-20ல் அதிவேக சதமான டேவிட் மில்லரின் சதம் சாதனையை சமன் செய்து இருக்கிறார்.

ரோஹித் சர்மா மனைவி

சமீப காலமாக ரோஹித் சர்மா விளையாடும் போட்டிகளை காண அவரது மனைவி ரித்திகா சஜ்தே களத்திற்கு வருகிறார். அதுகுறித்து ''பொதுவாக யாருக்காவது பிறந்த நாள் வந்தால் நாம் அவரோட போய் நேரத்தை செலவு செய்வோம். ஆனால் என் மனைவி விஷயத்தில் அப்படி இல்லை. நாங்கள் கிரிக்கெட்க்கு செல்லும் பயணங்களில் மட்டும்தான் நேரத்தை செலவிடுகிறோம். இப்படி ஒரு மனைவி அமைந்ததற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ரித்திகா பிறந்த நாள்

இரண்டாவது டி-20 போட்டிக்கு முதல் நாள் ரித்திகாவின் பிறந்த நாள் ஆகும். இதுகுறித்து ரோஹித் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இருக்கிறார். அதில் ''என்னுடைய ஒரே விருப்பம் எல்லாம் இந்த போட்டோவில் இருப்பதை போலவே நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பிறந்த நாள் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து

கிரிக்கெட் போட்டியில் தற்போது முழு பார்மில் இருக்கிறார் ரோஹித் சர்மா. மேலும் ரித்தியா மைதானத்திற்கு வந்தால் கண்டிப்பாக அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் ரித்திகா மூன்றாவது டி-20 போட்டிக்கு முன் ''என அதிர்ஷ்டகாரா வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இதுதான் ரோஹித் வெற்றியின் ரகசியம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Monday, December 25, 2017, 10:01 [IST]
Other articles published on Dec 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+