For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லிக்கும் எனக்குமான பகை ரொம்பப் பழசு பாஸு.. சொல்கிறார் ரூபல்

டாக்கா: விராத் கோஹ்லிக்கும் எனக்கும் இடையிலான மோதல் இருவரும் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்டது என்று கூறியுள்ளார் வங்கதேச வேகப் பந்து வீச்சாளர் ரூபல் ஹுசேன்.

ரூபல் ஹூசேனுக்கும், கோஹ்லிக்கும் இடையிலான மோதலை சமீபத்திய போட்டிகளில் ரசிகர்கள் கண்டனர். உலகக் கோப்பைப் போட்டியிலும், தொடர்ந்து வங்கதேசத்திற்கு இந்தியா டூர் சென்றபோதும் கோஹ்லியை ரூபல் சீண்டியதை ரசிகர்கள் பார்த்தனர்.

ஆனால் இவர்களது சண்டை திடீரென வந்தது அல்ல. மாறாக ஜூனியர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் என அழைக்கப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட மோதல் இது என்று கூறியுள்ளார் ரூபல்.

உலகக் கோப்பைப் போட்டியின்போது

உலகக் கோப்பைப் போட்டியின்போது

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தின்போது வங்கதேசத்துடன் இந்தியா மோதியது. அப்போட்டியில் கோஹ்லியுடன் கடுமையாக மோதினார் ரூபல். இது பரபரப்பைக் கிளப்பியது.

வங்கதேச டூரில்

வங்கதேச டூரில்

அதன் பின்னர் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோதும் கோஹ்லியை சீண்டி வம்பிக்கிழுத்தார் ரூபல்.

2008 முதலே

2008 முதலே

2008ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய அணி விராத் கோஹ்லி தலைமையில் ஆடி கோப்பையை தட்டிச் சென்றது. அப்போது வங்கதேச அணியில் ரூபல் இடம் பெற்றிருந்தார். அப்போது இரு தரப்புக்கும் இடையிலான ஒரு போட்டியில் இருவரும் கடும் வாய்ச் சண்டையில் ஈடுபட்டனர். நடுவர்கள் தலையிட்டு விலக்க நேரிட்டது.

விட மாட்டேன்

விட மாட்டேன்

இதுகுறித்து ரூபல் கூறுகையில், நான் ஜூனியர் உலகக் கோப்பைக் காலத்தில் 2 முறை கோஹ்லியை அவுட்டாக்கியுள்ளேன். சர்வதேச போட்டிகளிலும் சில முறை வீழ்த்தியுள்ளேன். ஆனால் அவர் சாதாரண வீரர் அல்ல. திறமையானவர்தான். இருப்பினும் அவரை என்னால் எளிதில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

நல்லவர்தான் பாஸ்

நல்லவர்தான் பாஸ்

மைதானத்திற்குள்தான் நாங்கள் முட்டிக் கொள்வோம். ஆனால் வெளியில் பழகுவதற்கு இனிமையானவர் கோஹ்லி. இருவரும் சாதாரணமாகவே பேசிக் கொள்வோம். எங்களுக்குள் நல்லுறவே நீடிக்கிறது.

ரூமுக்கு வந்து பேசினார்

ரூமுக்கு வந்து பேசினார்

உலகக் கோப்பைக் காலிறுதிப் போட்டிக்குப் பிறகு அவர் டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்து என்னைச் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினோம்.

ஆனால் பந்து வீசும்போது மட்டும்

ஆனால் பந்து வீசும்போது மட்டும்

அது என்னவோ தெரியவில்லை. அவருக்குப் பந்து வீசும்போது மட்டும் எனக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு வந்து விடுகிறது. ஆவேசமாக வீசத் தூண்டப்படுகிறேன். எனது பந்தை அவர் அடிக்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். இதனால்தான் விக்கெட் வீழ்த்தத் துடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ரூபல்.

இருடி இரு.. கோஹ்லிக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலா போகும்.. அப்ப வச்சுக்கிறோம்!

Story first published: Wednesday, February 3, 2016, 12:10 [IST]
Other articles published on Feb 3, 2016
English summary
Bangladesh's front line pacer Rubel Hossain has revealed his rivalry with India's flamboyant batsman Virat Kohli goes back to their U-19 cricket days.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X