Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னப்பா பண்ணி வச்சுருக்க? உடைக்கவே முடியாத சேவாக் ரெக்கார்டை உடைத்து எறிந்த ரியான் பராக்

மும்பை : ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை என கிண்டல் செய்யப்பட்ட ரியான் பராக், பிசிசிஐ நடத்தும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் வீரேந்தர் சேவாக்கின் நீண்ட நாள் சாதனை ஒன்றை உடைத்து மிரட்டி இருக்கிறார்.

2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். அப்போது ஏழு போட்டிகளில் ஆடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 13 மட்டுமே. அவரது மோசமான செயல்பாடுகளால் அப்போது ரசிகர்களால் மிகக் கடுமையாக விமர்சனமும், கிண்டலும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தன் சொந்த மாநிலமான அசாம் அணிக்காக ஆடி வருகிறார் ரியான் பராக். இந்த தொடரில் ஏழு போட்டிகளில் ஆடி உள்ள அவர் கடைசி ஆறு போட்டிகளிலும் அரைசதம் அடித்து தெறிக்க விட்டுள்ளார்.

Riyan Parag breaks Virender Sehwag T20 record in Syed Mushtaq Ali Trophy 2023

தொடர்ந்து ஆறு டி20 போட்டிகளில் ரியன் பராக் அரைசதம் அடித்து இருக்கிறார். வீரேந்தர் சேவாக் 2012இல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்தார். அது நீண்ட நாட்களாக முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. அந்த சாதனையை உடைத்து இருக்கிறார் ரியான் பராக்.

அசாம் மாநில வீரர் ரியான் பராக், சேவாக்கின் 11 ஆண்டுகால சாதனயை உடைத்து தன் மீதான விமர்சனத்துக்கும் சேர்த்து பதிலடி கொடுத்துள்ளார். தற்போது சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஏழு போட்டிகளில் 440 ரன்கள் குவித்து இருக்கிறார். அதன் சராசரி 62.86 ஆகும். கடந்த ஆறு இன்னிங்க்ஸ்களில் அவர் குவித்த ரன்கள் - 61 (34), 76 (37), 53 (29). 76 (39), 72 (37), மற்றும் 57 (33).

இத்தனை ஆண்டுகளில் பல வீரர்கள் சேவாக் சாதனைக்கு மிக அருகே வந்து அதை முறியடிக்காமல் சென்றனர். ஜிம்பாப்வே வீரர் மசகட்சா, பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் டேவிட் வார்னர், நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே இங்கிலாந்து உள்ளூர் வீரர் மாட்சென் உள்ளிட்ட வீரர்களும் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்தனர். ஆனால், சேவாக் சாதனையை தொட்டாலும், யாராலும் அதை உடைக்க முடியவில்லை. ஆனால், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் ரியான் பராக் அதை முறியடித்துள்ளார்.

Story first published: Friday, October 27, 2023, 18:17 [IST]
Other articles published on Oct 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+