For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

11 சிக்சர்களை பறக்கவிட்ட அராத்து பையன்.. 131 ரன்கள் விளாசிய ரியான் பராக்.. மரண மாஸ் பேட்டிங்

புதுச்சேரி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் அராத்து பையன் தான் ரியான் பராக். இவர் தன்னுடைய திமிர் பேச்சாலும் களத்தில் அடாவடியாக நடந்து கொண்டும் ரசிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கினார்.

இந்த உலகத்திலேயே தான் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்பது போல் பேசிய ரியான் பராக், கடந்த இரண்டு ஐபிஎல் தொடர் சீசனில் கடுமையாக தடுமாறினார்.

Riyan Parag hits 131 runs with 11 sixers in deodhar trophy 2023

இதனால் இவரை ரசிகர்கள் வெளுத்து வாங்கினர். இந்த நிலையில் தற்போது ரியான் பராக் தன்னுடைய திறமையை முதல்முறையாக பேட்டிங் மூலம் நிரூபித்து இருக்கிறார். பிசிசிஐ நடத்தும் தியோதர் கோப்பை புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு மண்டலம் அணியும்,வடக்கு மண்டலம் அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகிறது.

இதில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வடக்கு மண்டல அணியின் ஹர்சித்ரானா,நிஷாந்த் சிந்து, அபிஷேக் ஷர்மா, சந்திப் ஷர்மா போன்ற திறமை வாய்ந்த வீரர்களும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருந்தார்கள்.இந்த அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கிழக்கு மண்டல அணி தடுமாறியது. குறிப்பாக அபிமனியூ ஈஸ்வரன் பத்து ரன்களிலும் உட்கார்ஸ் சிங் 11 ரன்களிலும் ,விராட் சிங் இரண்டு ரங்களிலும் சிஎஸ்கே வீரர் சேனாபதி 13 ரன்களிலும் சவுரப் திவாரி 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து கிழக்கு மண்டல அணி தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ரியான் பராக் அதிரடியாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார். எதிரணி பந்துவீச்சை சிக்சருக்கு பறக்க விட்ட ரியான் பராக் 11 சிக்ஸர்களையும் 5 பவுண்டரிகளையும் விளாசினார்.

ரியான் பராகின் ஆட்டத்தால் கிழக்கு மண்டல அணி சரிவில் இருந்து மீண்டது. ரியான் பராகிற்கு துணையாக குமார் குஷாகாராகும் அபாரமாக விளையாடினார். முடிவில் 102 பந்துகளை எதிர்கொண்ட ரியான் பராக் 13 ரன்கள் விளாசினார். இதில் ஐந்து பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் கிழக்கு மண்டல அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

Story first published: Friday, July 28, 2023, 17:06 [IST]
Other articles published on Jul 28, 2023
English summary
Riyan Parag hits 131 runs with 11 sixers in deodhar trophy 2023 11 சிக்சர்களை பறக்கவிட்ட அராத்து பையன்.. 131 ரன்கள் விளாசிய ரியான் பராக்.. மரண மாஸ் பேட்டிங்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+