Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் 6 சிக்ஸ்.. 37 ரன்கள்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் ஓவரை பொளந்த இங்கிலாந்து வீரர் ரவி போபரா

ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் ராபின் உத்தப்பா வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து மொத்தம் 37 ரன்கள் சேர்த்து மிரள வைத்தார் இங்கிலாந்து வீரர் ரவி போபரா. பவுல் சுற்றில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

முன்னதாக குரூப் சி பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து இருந்தது. அடுத்து குரூப் சுற்றில் வெளியேறிய அணிகளுக்கு இடையேயான பவுல் சுற்று நடந்தது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஆடியது.

robin uthappa

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிகம் பவுலிங் செய்த அனுபவம் இல்லாத ராபின் உத்தப்பா நான்காவது ஓவரை வீசினார். ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் போட்டிகளில் மொத்தமே ஆறு ஓவர்கள் தான் என்பதால் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆடுவார்கள்.

அதே போல இங்கிலாந்து அணியின் ரவி போபரா உத்தப்பா வீசிய நான்காவது ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார். இடையே ஒரு பந்து ஒயிடாக வீசப்பட்டது. இந்த ஒரு ஓவரில் மட்டும் 37 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. ரவி போபரா 14 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். அவர் 8 சிக்ஸ் அடித்து இருந்தார். ஒரு ஃபோர் கூட அடிக்கவில்லை.

சமித் படேல் 18 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் 5 சிக்ஸ் மற்றும் 4 ஃபோர் அடித்து இருந்தார். இங்கிலாந்து அணி ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு பாரத் சிப்லி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அதிரடி துவக்கம் அளித்தார்.

ஸ்ரீவத்ஸ் கோஸ்சுவாமி 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ராபின் உத்தப்பா பந்து வீச்சில் சொதப்பியதைப் போல பேட்டிங்கிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி சொதப்பினார். ஸ்டூவர்ட் பின்னி இதற்கு முந்தைய போட்டியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து மிரட்டி நிலையில் இந்த போட்டியில் 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கேதர் ஜாதவ் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 6 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்த போட்டியில் 15 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து இருந்தார். ஆனாலும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி. இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, November 2, 2024, 16:10 [IST]
Other articles published on Nov 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+