ஐபிஎல் ஏலத்திற்கான சிஎஸ்கேவின் திட்டம்.. உண்மையை உடைத்த ராபின் உத்தப்பா..யார் யாருக்கு குறி தெரியுமா
மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தேர்வுகள் என்னவென்பது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 87 இடங்களுக்காக 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்பது குறித்து வியூகங்களை வகுத்து வருகிறது. இதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தான்.

ஐபிஎல் மினி ஏலம்
சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னை மண்ணில் ஓய்வு பெறுவேன் என அவரே கூறியிருந்தார். இதனால் ஐபிஎல் கோப்பையுடன் தோனியை வழியனுப்பி வைக்க வேண்டும் என வீரர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அதற்காக வீரர்கள் தேர்வையும் கவனத்துடன் செய்யவுள்ளனர்.

உத்தப்பா பதில்
இந்நிலையில் இந்தாண்டு ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா, அணியின் திட்டம் குறித்து பேசியுள்ளார். அதில், சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு நல்ல இந்திய பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். அதன்படி ஏலத்திற்கு வரும் அனுபவ வீரராக மணிஷ் பாண்டே இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட மணிஷ் பாண்டே சிஎஸ்கே கலாச்சாரத்திற்கு நன்கு பொருந்துவார்.

எதிர்கால சூப்பர் ஸ்டார்
இதே போல சென்னை அணிக்கு தற்போது ஒரு நல்ல ஆல்ரவுண்டரும் தேவைப்படுகிறார். டுவைன் பிராவோ ஓய்வு பெற்றுவிட்டதால், அவரின் இடத்தை நிரப்ப, அவரை போன்றே ஒருவர் வேண்டும். அதன்படி பார்த்தால் சாம் கரண் தான் சரியாக இருப்பார். அவர் ஏற்கனவே சிஎஸ்கேவுக்காக விளையாடி இருக்கிறார். மேலும் சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு குறிவைக்கும் என உத்தப்பா கூறியுள்ளார்.

மீதமுள்ள தொகை
சென்னை அணி மொத்தமாக 13 வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2.45 கோடியை வைத்துள்ளது. இதனை வைத்து தான் அந்த அணி ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்துவீச்சாளர், தோனிக்கு பிறகான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் என பெரும் தொகைகளை செலவளித்தாக வேண்டும். மேலும் லட்சங்களை செலவு செய்து இளம் வீரர்களை குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications