Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேசித்தவர்களுக்கு சுமையாக இருப்பது போல் தோன்றும்! மதிப்பற்றவனாக உணர்வேன்! உத்தப்பா உருக்கம்

பெங்களூர் : பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மன அழுத்தத்தால் தமது வாழ்க்கையில் பெருமளவு பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக 46 சர்வதேச ஒரு நாள் போட்டி, 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய உத்தப்பா 2007 டி20 உலக கோப்பை இந்தியா வென்றதுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இல் இந்திய அணி உலக கோப்பை தொடரில் தோல்வியை தழுவிய போது உத்தப்பா அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார். இந்தியாவுக்காக உத்தப்பா கடைசியாக 2015 ஆம் ஆண்டு தான் விளையாடினார்.

cricket Robin Uthappa

ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த உத்தப்பா திடீரென்று இந்திய அணியில் இடம் பெறாமல் போனார். இதனால் 2011 ஆம் ஆண்டு தாம் மன அழுத்தத்தில் உச்சியில் இருந்ததாக கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து வீரர் கிரஹாம் தார்பே மன அழுத்தம் காரணமாக தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டார் என்ற செய்திகளை நாம் கேட்டோம்.

கிரஹாம் தார்பே மற்றும் பல வீரர்கள் மன அழுத்தத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் நான் மன அழுத்தம் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்திப்பேன். மன அழுத்தம் ஏற்பட்டால் நிச்சயம் அது நமது வாழ்க்கையை சீரழித்து விடும். நம் வாழ்க்கையை சுமையாக மாறிவிடும்.

வாழவே பிடிக்காது என்ற நிலை வந்துவிடும் நமக்கு நாமே ஒரு சுமையாக மதிப்பற்றவன் போல் உணர்வு. நம்மை நேசிக்கும் மனிதர்களுக்கு நாமே சுமையாகி விட்டமோ என்று நினைக்கத் தோன்றும். உங்களுக்கு நம்பிக்கை என்பது கொஞ்சம் கூட இருக்காது. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடினமாகவும் சுமையாகவும் தெரியும்.

நீங்கள் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டது போல் உணர்வீர்கள் அப்படிப்பட்ட மன அழுத்தத்தை நான் 2013 ஆம் ஆண்டு பல மாதங்களாக உணர்ந்தேன். படுக்கையை விட்டு என்னால் எழுந்திருக்க கூட முடியாது. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கும். கண்ணாடி முன் நின்று என் முகத்தை பார்க்கவே எனக்கு தோன்றாது. முகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு முதலில் வராது. அந்த தருணங்களில் நான் தோல்வியற்ற நபராக விளங்குவேன்.

வாழ்க்கையில் நாம் எப்படி இருக்க வேண்டும். ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்று நினைத்தேன். பாதி காலம் சென்று விடும். இதிலிருந்து வெளியே வர அனைவரும் மருத்துவர் உதவியை நாட வேண்டும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் உத்தப்பா, சிஎஸ்கே, கேகேஆர், ஆர் சி பி, மும்பை இந்தியன்ஸ், பூனே ராஜஸ்தான் போன்ற ஆறு அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 20, 2024, 19:32 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+