Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவாஸ்கர், கபில்தேவ் மோதல் தெரியுமா?? கோலிக்கு ஒரே ஒரு புகைப்படம் மூலம் பாடம் எடுத்த கவாஸ்கர் மகன்..!!

மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை வீரர்களுக்குள் கருத்து வேறுபாடு, மோதல் வருவது புதுசு அல்ல.

இது காலம் காலமாக நடந்து வருவது. இன்று கோலி, ரோகித் , நேற்று கம்பீர், தோனி, , அதற்கு முன்பு கங்குலி,கிரேக் சேப்பல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்

ஐ.சி.சி. கோப்பையை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக கோலியின் பதவி போனது. ஆனால், உலகக் கோப்பையை வென்றதற்காகவே கேப்டன் பதவியை விட்டு தூக்கிய நிகழ்வு இங்கு நடந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

சாம்பியன் கபில்தேவ்

சாம்பியன் கபில்தேவ்

இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஜாம்பவான் கவாஸ்கரை, தடாலடியாக பி.சி.சி.ஐ. பொறுப்பிலிருந்து நீக்கியது. அந்தப் பதவிக்கு கபில்தேவ் வந்தார். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனையடுத்து கபில் தேவ் இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

தடாலடி மாற்றங்கள்

தடாலடி மாற்றங்கள்

கபில் தேவ், அப்படி உச்சத்தில் இருந்த நேரத்தில், அவரை கேப்டன் பதவியை விட்டு நீக்கி மீண்டும் கவாஸ்கருக்கு அந்த பொறுப்பை பி.சி.சி.ஐ வழங்கியது. உலகக் கோப்பையை வென்றவருக்கே அந்த நிலை தான் என்றால் நீங்களே பார்த்து கொள்ளுங்கள். சரி, கவாஸ்கர் தான் அந்த பணியில் இருந்தாரா என்றால் அதுவும் கிடையாது, சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கபில்தேவே கேப்டனாக வந்தார்.

அணி முக்கியம்

அணி முக்கியம்

அப்போது எல்லாம் மும்பையில் இருந்து வந்தவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். ஆனால், கபில்தேவ் ஹரியானாவை சேர்ந்தவர். இதனால் அவர் பரபலமானதால், பி.சி.சி.ஐ.யில் இருந்த நிறைய பேருக்கு அது பிடிக்கவில்லை. இதனால் தான் அவர் உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் கபில்தேவ், கவாஸ்கர் இடையிலான அதிகார மோதல் வெளி உலகத்திற்கு வந்ததே கிடையாது. எனென்றால் அது அணியை பாதிக்கும் என இருவருக்குமே தெரியும்

ரோகன் அறிவுரை

ரோகன் அறிவுரை

இதனை தான் கவாஸ்கரின் மகன் ரோகன் கவாஸ்கர், ஒரு புகைப்படம் மூலம் பதிவிட்டுள்ளார். அதில் கபில்தேவ், கவாஸ்கர், மோகிந்தர் அமர்நாத் என மூன்று பேரும் மகிழ்ச்சியாக அமர்ந்து உரையாடுகின்றனர். எத்தனை தலைமுறை நட்பு, அன்பு, மரியாதை.. இதனை தான் ஒரு அணி உருவாக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார். விராட் கோலி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு அறிவுரை சொல்வது போல் ரோகன் கவாஸ்கர் இந்த படத்தை பதிவிட்டுள்ளார்.

Story first published: Friday, December 17, 2021, 16:56 [IST]
Other articles published on Dec 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+