Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ-க்கு வந்த பாலியல் புகார்.. டெல்லியை அதிர வைத்த ரோகன் ஜெட்லி சர்ச்சை.. என்ன நடக்கிறது?

டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ரோகன் ஜெட்லி மீதான பாலியல் புகார் பூதாகரமாக வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா குறித்து வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. அணிக்குள் நடக்கும் அரசியல்களை வெளிப்படையாக கூறியதால் பதவியும் விலகினார்.

இந்நிலையில் தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ரோகன் ஜெட்லி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. அவர் டெல்லி வாரிய அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

ஜோட்ஸ்னா என்ற பெண் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ். லக்‌ஷ்மண் ஆகியோருக்கு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், டெல்லி கிரிக்கெட் வாரிய தலைவர் ரோகன் ஜெட்லி, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

அதில், நீண்ட காலமாக தன்னுடன் வாழ்ந்து வந்த அவர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பயன்படுத்திக்கொண்டுள்ளார். அவரின் மனைவியிடம் விவாகரத்து பெற்றுவிட்டு வருவதாக கூறினார். ஆனால் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். எங்களின் பிரச்சினை பெரிதாக வெடித்த போது டெல்லி கிரிக்கெட் வாரிய மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் இதை செய்தார்.

கொலை மிரட்டல்கள்

கொலை மிரட்டல்கள்

மேலும் ரோகனுடைய குடும்பத்தினர் தனக்கு பணம் வழங்குவதாகம் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் கோரினர். அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இந்த கடிதம் இந்திய கிரிக்கெட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஸ்பெஷல் விசாரணை

ஸ்பெஷல் விசாரணை

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாஜக தலைவரும், சீனியர் வழக்கறிஞருமான சுப்ரமணிய சுவாமி தலையிட்டுள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், ரோகன் ஜெட்லி மீதான பாலியல் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரிக்க வேண்டும். அந்த விசாரணையின் முடிவு வரும் வரையில் ரோகனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, February 24, 2023, 17:57 [IST]
Other articles published on Feb 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+