சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டிஆர்எஸ் பயன்படுத்துவதில் இந்திய அணி வீரர்கள் தடுமாறியது, ரசிகர்களிடைய சிரிப்பை ஏற்படுத்தியது.
நடுவர்கள் கொடுக்கும் ஒரு தவறான முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுகிறது. இதற்காக தான் நடுவரின் முடிவை மறு பரிசீலினை செய்யும் டிஆர்எஸ் முறை கொண்டு வரப்பட்டது.
ஒருநாள் கிரிக்கெட்டில ஒரு இன்னிங்ஸ்க்கு 2 டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்படும். இதில் டிஆர்எஸ் வெற்றிக்கரமாக மாறினால், அந்த வாய்ப்பு அப்படியே இருக்கும்.

அதுவே நாம் எடுக்கும் டிஆர்எஸ் முடிவு தோல்வியில் முடிந்தால், அந்த வாய்ப்பு போய்விடும். மீதம் ஒரு வாய்ப்பு தான் இருக்கும். இதனால் கேப்டன்கள் பார்த்து முடிவு எடுப்பார்கள். டிஆர்எஸ் முடிவு எடுக்க, விக்கெட் கீப்பரும் பந்துவீச்சாளரும் தான் இணைந்து சரியான முடிவை எடுக்க வேண்டும். இதனால் தான் தோனி இருக்கும் போது , இந்தியா டிஆர்எஸ் முடிவை சரியாக பயன்படுத்தும்.
தோனி விக்கெட் கீப்பராக இருக்கும் வரை எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவருக்கு பிறகு, வந்தவர்கள் தடுமாறினர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 125 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாறிய போது அலெக்ஸ் கேரிக்கு குல்தீப் பந்தவீசிய போது , அது பேட்ஸ்மேனின் காலில் பட்டது. அதற்கு இஷான் கிஷன்( substitute keeper), ரோகித் ஆகியோர் டிஆர்எஸை பயன்படுத்த முடிவு எடுத்தனர்.
எப்போதும் பந்துவீச்சாளர்கள் தான் விக்கெட் எடுக்க வேண்டிய முனைப்பில் டிஆர்எஸ் முடிவை எடுக்க வற்புறுத்துவார்கள். ஆனால் இங்கு ரோகித் சர்மா டி ஆர்எஸ் பயன்படுத்த முடிவு எடுத்த போது, குல்தீப் யாதவ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ரிப்ளேவில் பந்து ஸ்டம்பின் பைல்சில் பட்டதால் நடுவர் நாட் அவுட் என்று சொன்னதால், இதுவும் நாட் அவுட் என ஆனது.

இதே போன்று ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஏகார் பேட்டிங் செய்யும் போது குல்தீப் யாதவ் பந்துவீசினார். அப்போது பந்து காலில் பட்டதை அடுத்து அவர் ரிவியூ கேட்டார். ஆனால் பந்து ஸ்டம்பில் படாது என்று கணித்த ரோகித் சர்மாவும், ராகுலும் டிஆர்எஸ் வேண்டாம் என முடிவு எடுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து அடம் பிடித்தார்.
இதனால் குல்தீப்பை நம்பி ரோகித் டிஆர்எஸ் எடுக்க, அது வீணானது. இதனால் முதலில் சிரித்த ரோகித், திடீரென்று குல்தீப்பை பார்த்து திட்டினார். என்ன ரோகித் அந்நியன் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்