Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி பண்ணீங்க.. அப்படியே போயிடுங்க.. கெரியரை பதம் பார்த்த நாள்.. ரோஹித்துக்கு இனி கஷ்டம்தான்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சரியாக ஆடாதது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. சென்னை பிட்ச் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த 578 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது.

சரியாக ஆடவில்லை

சரியாக ஆடவில்லை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கூட ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மா ஆடினார். காயம் காரணமாக இந்த தொடரின் தொடக்கத்தில் அவர் ஆடவில்லை. ஆனால் அதிலும் இவர் சரியாக ஆடவில்லை.

கவனம்

கவனம்

இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் கொஞ்சம் நன்றாக ஆடினார். இந்திய அணி திணறிய போதும் கூட ரோஹித் சர்மா அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. போட்டியை மாற்ற கூடிய அளவிற்கு இவரின் ஆட்டம் அவ்வளவு அதிரடியான ஆட்டமாக இல்லை. ஆனால் இந்தியா இந்த தொடரில் வென்றதால் இவரின் மீது விமர்சனம் வைக்கப்படவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ரோஹித் சர்மா பொறுப்பாக ஆடி இருக்க வேண்டும். ஆனால் இன்றும் அவர் கவனமாக ஆடவில்லை.

அதே முறை

அதே முறை

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எப்படி ஆடினாரோ அதேபோல் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆகி உள்ளார். புல் லென்த் பந்தில் அதேபோல் ரோஹித் அவுட்டாகி உள்ளார். இப்போதுதான் டெஸ்ட் கேரியரில் ரோஹித் கவனம் பெற்று வருகிறார்.

சந்தேகம்

சந்தேகம்

ஆனால் அதிலும் கூட அவர் சரியாக ஆடுவது இல்லை. ரோஹித் சர்மாவிற்கு வயதாகி வருகிறது, பிட்னசும் சரியில்லை. இதனால் இவர் டெஸ்ட் அணியில் நீடிப்பது கொஞ்சம் சந்தேகமாக விஷயமாக உள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 13:00 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+