Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் எதையும் மாற்றக்கூடாது... இதை செய்தால் மட்டும் போதும் ... முன்னாள் வீரர் அட்வைஸ்

சென்னை: தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஹிட் மேன் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமச்சாரி ஸ்ரீ காந்த் கூறியுள்ளார்.

 சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக அவர் ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில், 6,21,26,52,44,7,6,12 என்ற ரன்களே எடுத்துள்ளார்.

இந்தியாவிலும் திணறல்

இந்தியாவிலும் திணறல்

ஆஸ்திரேலியாவுடனான கடைசி 2 டெஸ்டிலும் ரோகித் சர்மாவின் ஆட்டத்தால் அதிருப்தியடைந்திருந்த ரசிகர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் நிச்சயம் அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முதல் இன்னிங்சில் 6 ரன்னும், 2வது இன்னிங்சில் 12 ரன்னும் சேர்த்து ரோகித் சர்மா ஆட்டமிழந்துள்ளார். இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அட்வைஸ்

அட்வைஸ்

இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஸ்ரீ காந்த், ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்காக தன்னுடைய இயல்பான பேட்டிங் ஸ்டைலை மாற்றக்கூடாது. அவர் அனுபவமிக்க கிளாஸ் ப்ளேயர். ஒரு முறை அவர் ஆடுகளத்தில் நின்றுவிட்டால்போதும், பின்பு ரன்கள் தானாக வரும். பின்பு ரோகித் விளையாடுவதை பார்ப்பதற்கே அதிரடியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஃபில்ட்டிங் அமைக்க முடியாது

ஃபில்ட்டிங் அமைக்க முடியாது

ரோகித்துக்கு அட்வைஸ் வழங்கியுள்ள முன்னாள் வீரர் அனுஷுமான் கியூக்வாட், ரோகித்தை மீண்டும் பழைய ஃபார்மில் பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஒரு முறை அவர் ஆட தொடங்கிவிட்டால் எந்த கேப்டனும் அவருக்கு ஃபீல்டிங் செட் செய்ய முடியாது. அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் அதிரடி காட்டுவார் என கியூக்வாட் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 12, 2021, 19:51 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+