
திரும்பவும் அவுட்
இவ்விரு வீரர்களும் கடந்த முறை எப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து, மோசமான தொடக்கத்தை அளித்தார்களே, அதே போன்று கார்பன் காப்பி மாதிரி, இம்முறையும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக கே எல் ராகுல் மொக்கை மேட்சில் எல்லாம் அபாரமாக விளையாடுகிறார்.

மீண்டும் ஏமாற்றம்
ஆனால், வென்றே தீர வேண்டும் என்ற முக்கியமான ஆட்டத்திலும், நெருக்கடி அதிகம் உள்ள அணிகளை எதிர்கொள்ளும் போது எல்லாம் ராகுல் காலை வாரி விட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறார். இதே போன்று ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மாவும் கடந்த சில மாதங்களாக வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுகிறார்.

இந்தியா திணறல்
பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுப் வீசிய பந்தை தொட்ட ரோகித் சர்மா, சிலிப் ஃபில்டர்களிடம் பிடிப்பட்டார். இந்திய அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால் மற்ற வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட, சூர்யகுமார் யாதவ் 10 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ரசிகர்கள் கோபம் ஏன்
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல், ரோகித் முக்கிய போட்டியில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் பெரிய ஏமாற்றமே அதிரடியாக விளையாட முற்பட்டு ஆட்டமிழந்தார்கள் என்றால் கூட ரசிகர்களின் மனது ஏற்று கொள்ளும், ஆனால் பந்தை எதிர்கொள்ளவே இவர்கள் திணறுவது தான் ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.


Click it and Unblock the Notifications











