Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே பதிலில்.. கோலி ஐடியாவுக்கு "ஆப்பு" வைத்த பிசிசிஐ - மும்பையில் இருந்து பறந்த உத்தரவு

இலங்கை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஓப்பனிங் சிக்கலுக்கு பிசிசிஐ முடிவு கட்டியிருக்கிறது. கேப்டன் கோலியின் பிளான் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

 இந்திய அணி ஏற்பாடு

இந்திய அணி ஏற்பாடு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது இந்திய அணி. இந்நிலையில், ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்க ப்ரித்வி ஷாவை அழைக்க, இந்திய அணி ஏற்பாடு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

 தற்போது இலங்கையில்

தற்போது இலங்கையில்

அதேபோல், மற்றொரு வீரராக தேவ்தத் படிக்கல்லையும் இங்கிலாந்து அழைக்க, இந்திய அணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இருவருமே பேக்-அப் வீரர்களாக இருக்க வைக்க கோரிக்கை விடப்பட்டது. ப்ரித்வி ஷாவும், படிக்கல்லும் தற்போது இலங்கை தொடரில் உள்ளனர். டிராவிட் பயிற்சியாளராக உள்ள இந்திய 'ஏ' அணி, இலங்கையை 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் சந்திக்கவிருக்கிறது.

 வெவ்வேறு யுக்தி

வெவ்வேறு யுக்தி

இதனிடையே, ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல்லை இலங்கையில் இருந்து உடனடியாக இங்கிலாந்து அழைக்க, பிசிசிஐக்கு முறைப்படி இந்திய அணி கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அதற்கு கறாராக மறுத்துவிட்டதாக நேற்றே செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவர், இங்கு டி20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு, வெவ்வேறு யுக்திகளுடன் வீரர்களை மன ரீதியாக தயார் செய்து வருகிறோம். இந்த நேரத்தில், அவர்களை திசை திருப்பும் விதமாக டெஸ்ட் தொடருக்கு அழைப்பது என்பது, குறிப்பாக இங்கிலாந்துக்கு அழைப்பது என்பது நிச்சயம் Back fire-ஆகத் தான் வாய்ப்புள்ளது என்று பிசிசிஐயிடம் டிராவிட் கண்டிப்புடன் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

Recommended Video

T20 World Cup-ல் Opening களமிறங்க திட்டம் போட்ட Virat Kohli.. எச்சரிக்கும் Aakash Chopra
 மாயங்க் அகர்வால்

மாயங்க் அகர்வால்

இந்நிலையில், இந்திய அணி வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் இருவரும் இங்கிலாந்து அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காயமடைந்த ஷுப்மன் கில்லுக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாருமே அனுப்பப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.ரோஹித் ஷர்மா மற்றும் மாயங்க் அகர்வால் மட்டுமே தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கேப்டன் கோலியின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகிகள் இந்திய அணியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, July 8, 2021, 16:58 [IST]
Other articles published on Jul 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+