Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாஸ்.. இது புது ப்ளானா இருக்கே!.. செமி ஃபைனலுக்கான பயிற்சி.. ரோகித் - டிராவிட் போட்ட மெகா ப்ளான்!

அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கான பிட்ச்-ஐ புரிந்துக்கொள்ள முடியாமல் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மாற்று ஏற்பாட்டை செய்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து போட்டி

இங்கிலாந்து போட்டி

இந்த போட்டிக்காக அடிலெய்டு சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கும் போதிலும் ப்ளேயிங் 11- ஐ ராகுல் டிராவிட் இன்னும் உறுதி செய்யாமல் இருக்கிறார். இதற்கு காரணம் பிட்ச்- குழப்பம் தான். இந்த தொடரிலேயே இந்திய அணியால் புரிந்துக்கொள்ள முடியாத பிட்ச்-ஆக ஓவல் மைதானம் இருக்கிறது.

 மைதானத்தின் வடிவம்

மைதானத்தின் வடிவம்

அடிலெய்டில் மற்ற மைதானங்களை போன்று இல்லாமல் நீள் வட்ட வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் தான் இதற்கு ஓவல் மைதானம் என்றே பெயர் இருக்கிறது. உலகில் மிகப்பெரிய ஸ்ட்ரைக் பவுண்டரிகள் இந்த மைதானம் தான். 80 மீட்டருக்கு மேல் ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரிகள் இருக்கும். ஆனால் பேட்ஸ்மேனின் இரு பக்கங்களிலும் ( ஸ்கொயர் திசை ) பவுண்டரி எல்லை சற்று அருகில் இருக்கும்.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

இந்த காரணத்தால் இந்த மைதானத்தில் அடிக்கடி பிட்ச்-ஐ மாற்றும் பழக்கமே கிடையாது. ஏனென்றால் பிட்ச்-ஐ ஒருபுறம் சற்று நகர்த்தி பயன்படுத்தினால் கூட, குறிப்பிட்ட ( இடது அல்லது வலது கை ) பேட்ஸ்மேன்களுக்கு சுலபமாக சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். எனவே பிட்ச்-ஐ மாற்றாமல் மத்தியிலேயே வைக்கின்றனர்.

டிராவிட் ஐடியா

டிராவிட் ஐடியா

இந்நிலையில் வியூகத்தை வகுக்க பிட்ச்-ஐ பராமரிக்கும் ஊழியரிடம் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது பிட்ச்-ன் தன்மை எதுபோன்ற கால சூழல்களில் எப்படி மாறும், இங்கு எதுபோன்ற வியூகத்தை வகுத்தால் சரியாக இருக்கும் என்பனவற்றை கேட்டறிந்துள்ளனர். சைட் பவுண்டரிகளை அடிக்க ஏதுவாக இருந்தால் பண்ட்-ஐ உள்ளே கொண்டு வரலாம்.

தன்மை மாறியது

தன்மை மாறியது

இந்த மைதானத்தில் கடந்த 2 போட்டிகளிலும் 150 ரன்கள் அடிப்பதே கடினமாக இருந்தது. ஆனால் இந்தியா விளையாடிய போது 184 ரன்களை குவித்தது. பிட்ச்-ன் தன்மை மாறியிருப்பது தெரிகிறது. ஒருவேளை பேட்டிங்கிற்கு கடினமானதாக மாறினால் பவுன்சர்களை எதிர்கொள்ள பண்ட்-ஐ உள்ளே கொண்டு வருவார்கள். ஒருவேளை பேட்டிங்கிற்கு சாதகமானால் சாஹலை உள்ளே கொண்டு வரலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Story first published: Wednesday, November 9, 2022, 14:27 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+