Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் ரிப்போர்ட்டராக மாறிய ரோஹித் சர்மா...கலாய் வாங்கிய டீம் மேட்ஸ்!

டெல்லி : ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி தற்போது டி- டுவென்டி போட்டிகளுக்கு தயார் ஆகி வருகிறது. அணியின் அனைத்து வீரர்களும் முழு பார்மில் இருக்கும் இந்த நிலையில் எந்த அணியாக இருந்தாலும் இந்தியா எளிதாக வென்றுவிடும் என்றே கூறலாம்.

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பார்மிற்கு திரும்பி இருக்கும் ரோஹித் சர்மா ஒருநாள் ரிப்போர்ட்டர் அவதாரம் எடுத்து டீமில் இருக்கும் புது வீரர்களைக் கலாய்த்து இருக்கிறார். சஹால், குல்தீப் யாதவ் இவர்களை ரோஹித் பேட்டி எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 Rohit Sharma as the on day reporter.... took a funny interview !

பிசிசிஐ வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ இப்போது கிரிக்கெட் உலகில் வைரல் ஆகி வருகிறது.

சஹலிடமும், குல்தீபிடமும் கேள்வி கேட்ட ரோஹித் உங்களுக்கு பெண் ரசிகைகள் நிறைய இருக்கிறார்கள் , அவர்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்...? என்று கலாய்க்க ஆரம்பித்தார். இருவரும் வெட்கப்பட்டு பேசியதை டிவிட்டரில் ரோஹித் தனியாக போஸ்ட் செய்திருக்கிறார்.

இதேபோல் உங்களுக்கு பிடித்த நடிகை யார், எந்தக் கார் வாங்க இருக்கிறீர்கள் , எந்த பிரபலத்தின் மொபைல் எண் வேண்டும் என அடுக்கடுக்காக விளையாட்டுத்தனமாக கேள்விகளை கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். அதை அப்படியா டிவிட்டரிலும் போஸ்ட் செய்து இருக்கிறார்.

ஒன்றாக சிறப்பாக செயல்படும் சஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் ஸ்பின் இரட்டையர்கள் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 4, 2017, 17:39 [IST]
Other articles published on Oct 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+