Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேட்டை பிடித்த ரோகித் சர்மா.. தவறு செய்த நடுவருக்கு பாடம்.. தோனியை போல் அசத்தல்..!!

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா செய்த சேட்டை ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக ஷாய் ஹோப் மற்றும் கெயில் மெயர்ஸ் களமிறங்கினர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனையடுத்து தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. முதலில் கெயில் மெயர்ஸ்க்கு நடுவர் எல்.பி. டபிள்யூ கொடுத்தார். ஆனால் மெயர்ஸ் மறு ஆய்வு செய்ததில் பந்து ஸ்டம்பை மிஸ் செய்தது தெரியவந்தது. இதனால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரோகித் சேட்டை

ரோகித் சேட்டை

அதே ஓவரில் மீண்டும் அதே போன்று சாஹர் பந்தை ஸ்விங் செய்தார். பந்து பேட்டில் உரசி செல்ல அதனை இஷான் கிஷன் கேட்ச் பிடித்தார். ஆனால் நடுவர் இதற்கு அவுட் தர மறுத்துவிட்டார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா, நடுவரை கலாய்க்கும் தோரனையில் ரிவியூ கேட்டார்.

மெயர்ஸ் அவுட்

மெயர்ஸ் அவுட்

மூன்றாம் நடுவரின் மறு ஆய்வில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மெயர்ஸ் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா, டிஆர்எஸ் தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தோனியை போல், ரோகித்தும் செயல்படுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தோனி வழியில்

தோனி வழியில்

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் 4 முறை டி.ஆர்.எஸ். முறையை சரியாக பயன்படுத்தி ரோகித் சர்மா வெற்றி கண்டார். ரோகித்தின் அணுகு முறை 99.9 சதவீதம் சரியாக இருப்பதாக கவாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தீபக் சாஹர் காயம் காரணமாக வெளியேறியதால் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, February 20, 2022, 22:23 [IST]
Other articles published on Feb 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+